ADVERTISEMENT

இலங்கை அணியின் வீரர் மலிங்கா ஹாட்ரிக் சாதனை!

11:00 PM Sep 06, 2019 | santhoshb@nakk…

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 'ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற அணி இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது.

அதன் பிறகு 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, ஆரம்ப முதலே இலங்கை அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அதனை தொடர்ந்து 3- வது ஓவரில் இலங்கை அணியின் வீரர் மலிங்கா பந்து வீச தொடங்கினார். அந்த ஓவரில் அடுத்தடுத்த விக்கெட்கள் விழ, தொடர்ச்சியாக 4 பந்துகளில், 4 விக்கெட்களை எடுத்து 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார் மலிங்கா.

அதேபோல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் மலிங்கா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகளில் மட்டும் இலங்கை அணியின் வீரர் மலிங்கா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 16 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி, 88 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT