ADVERTISEMENT

நான் புல்லரித்துபோனேன்- சாதனைக்கு பின் சிந்து நெகிழ்ச்சி...

01:28 PM Aug 26, 2019 | kirubahar@nakk…

சுவிட்சர்லாந்தின் பாசில் நகரில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகின் நான்காம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை பி.வி.சிந்து எதிர் கொண்டார். இதில் 21-7, 21-7 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றிபெற்று உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை சிந்து பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பிரதமர், பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பெற்ற வெற்றியை தன் தாய்க்கு சமர்ப்பிப்பதாக சிந்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், "எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றியை பற்றி கூற வார்த்தைகளே இல்லை. நான் நீண்ட நாட்களாக இந்த வெற்றிக்காக காத்திருந்தேன். கடந்த முறை வெள்ளி வென்றேன். ஆனால் தற்போது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளேன். எனது வெற்றிக்கு காரணம் என் பயிற்சியாளர்கள் கோபி, கிம் மற்றும் என் பெற்றோர். என் மீது நம்பிக்கை வைத்து உறுதுணையாக இருந்த ஸ்பான்சர்ஸ் மற்றும் ஊக்கப்படுத்திய ஊழியர்களும் என அனைவரும் தான் என் வெற்றிக்கு காரணம்.

என் அம்மாவின் பிறந்த நாளான இன்று நான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன். அவரது பிறந்தநாளுக்கு எதாவது பரிசுகொடுக்க வேண்டுமென நினைத்தேன். இப்போது என்னுடைய தங்கப் பதக்கத்தை அவருக்கு பரிசாக கொடுக்கிறேன். என் பெற்றோரால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன். தேசிய கீதம் ஒலித்தவாறே தேசியக்கொடி என் பின்னால் பறந்தது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது. நான் புல்லரித்துபோனேன். நாட்டுக்காக விளையாடுவது பெருமையான தருணம்" என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT