உலக பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்திருக்கிறார் சிந்து. ‘இந்தியாவின் பெருமையே’ என்று அவருக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி.
உலக சாம்பியனாகிவிட்ட சிந்து, 14 வருடங்களுக்கு முன் 10 வயது சிறுமியாக இருந்தபோது, சிவகாசியில் உள்ள ஏ.ஜே.ஸ்டேடியத்தில் பேட்மிண்டன் விளையாடி யிருக்கிறார்.
அப்போது எடுத்த புகைப்படத்தைத் தங்களின் முகநூலில் பதிவிட்டு சிந்துவை வாழ்த்தியிருக்கிறது அந்த ஸ்டேடியம். ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்..’ என்பதற்கேற்ப, சிறுமியாக இருந்தபோதே சிந்து சிறப்பாக ஆடியதை, பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்கள் அந்த ஸ்டேடியத்தின் உறுப்பினர்கள்.
“இந்த வெற்றிக்காகத்தான் நீண்ட காலம் காத்திருந்தேன்..” எனச் சொல்கிறார் சிந்து. மென்மேலும் அவர் வெற்றிகளைக் குவித்து இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கட்டும்!
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });