ADVERTISEMENT

மேற்கு ஆஸ்திரேலியாவுடன் இரண்டாவது பயிற்சி ஆட்டம்... இந்திய அணி தோல்வி

09:08 AM Oct 14, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

8 ஆவது 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் 16ம் தேதி துவங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியை அக்டோபர் 23ம் தேதி விளையாடுகிறது.

ஆஸ்திரேலியா செல்வதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் சர்மா “இப்போது இருக்கும் வீரர்களில் 7 முதல் 8 வீரர்களுக்கு ஆஸ்திரேலியா புதிய களம், அதனால் தான் விரைவாக ஆஸ்திரேயாவிற்கு செல்கிறோம். முதலில் பெர்த் சென்று அங்கு மைதானத்தின் தன்மையை பார்க்க உள்ளோம். இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆட உள்ளோம். வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு இழப்புதான் எனினும் அவருக்கு மாற்றாக நம்மிடம் நல்ல பவுலர்கள் உள்ளனர். ஆஸ்திரேலிய மைதானத்தை பொறுத்தே யாருக்கு அணியில் இடம் என்பது தெரியும்” எனக் கூறியிருந்தார்.

மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று உலகக் கோப்பையில் தனது பயணத்தை துவங்கியது. இந்நிலையில் மீண்டும் மேற்கு ஆஸ்திரேலியாவுடன் பயிற்சி போட்டியில் விளையாடியது.

இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்ற கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிரங்கிய மேற்கு ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆர்ச்சி ஸார்ட் மற்றும் நிக் ஹோப்சன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

20 ஓவர்கள் முடிவில் மேற்கு ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஆர்ச்சி ஸார்ட் 52 ரன்களும் நிக் ஹோப்சன் 64 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணியில் அஷ்வின் 3 விக்கெட்கள் மற்றும் ஹர்ஷல் படேல் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதன் களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் மட்டும் சிறப்பாக ஆடி வேகமாக ரன்களை சேர்த்தார். மறுபுறம் வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 74 ரன்களை எடுத்தார்.

சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலிய அணியில் மெக்கென்ஸீ, லான்ஸ் மோரிஸ் மற்றும் மேத்யூ கெல்லி தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT