Skip to main content

ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் கே.எல். ராகுல்; காயம் காரணமாக முடிவு 

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

KL Rahul withdraws from IPL series; Termination due to injury

லக்னோ அணிக்கு கேப்டனாக செயல்பட்ட கே.எல். ராகுலுக்கு மே 1 ஆம் தேதியில் நடந்த பெங்களூர் அணியுடனான போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது காலில் காயம் ஏற்பட்டது. இதன் பின் சென்னை அணியுடனான போட்டியிலும் ராகுல் விளையாடவில்லை. ராகுலின் விலகலைத் தொடர்ந்து லக்னோ அணிக்கு குருணால் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். 

ராகுல் காலில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்துள்ளதால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக லக்னோ அணி கேப்டன் கே.எல். ராகுல் அறிவித்துள்ளார். ராகுலின் விலகலைத் தொடர்ந்து எஞ்சியுள்ள போட்டிகளிலும் லக்னோ அணியின் கேப்டனாக குருணால் பாண்டியா செயல்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

அதேபோல் இந்தாண்டில் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்தும் காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகியுள்ளார். ஏற்கனவே ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா ஆகியோர் அணியில் இடம் பெறாத நிலையில் தற்போது கே.எல்.ராகுலும் அணியில் இருந்து காயம் காரணமாக விலகி இருப்பது அணிக்கு மிக பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் இல்லாததை ஈடு செய்யும் விதமாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள ரஹானேவை போல் கே.எல்.ராகுல் வெளியேறியதை ஈடு செய்ய யார் அணியில் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Next Story

சாதித்த சஞ்சு; ஜெய்ப்பூரில் ஜெயித்த ராஜஸ்தான்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
RR vs LSG ipl live score update rajasthan wins in jaipur

ஐபிஎல் 2024 இன் 4ஆவது லீக் ஆட்டம் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே மாலை தொடங்கியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் களம் இறங்கினர். பட்லர் 11 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றினார். அதைத் தொடர்ந்து அதிரடியாய் ஆடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வாலும் 24 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

பின்பு கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. அதிரடியாக விளையாடிய ரியன் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹெட்மயர் 5 ரன்களில் வெளியேறினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபக்கம் பொறுமையாக அதே நேரத்தில் தேவையான நேரத்தில் அதிரடி காட்டி ஆடிய சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்தார். அடுத்து வந்த ஜுரேல் தன் பங்கிற்கு 20 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 82 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். லக்னோ அணி தரப்பில் நவீன் 2 விக்கெட்டுகளும், மொஹ்சின் கான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களம் இறங்கியது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான டி காக் 4 ரன்களில் போல்ட் பந்து வீச்சில்ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த படிக்கல் ரன் எதுவும் எடுக்காமல் போல்ட் பந்தில் கிளீன் போல்டு ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஆயுஸ் படோனியும் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார்.

பின்னர் வந்த தீபக் ஹூடா ராகுலுடன் இணைந்து அணியை சரிவிலிருந்து ஓரளவு மீட்டார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஹூடா 26 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் கே.எல். ராகுல் தனக்கே உரிய பாணியில் எப்போதும் போல பொறுப்பாக ஆடினார். அவருக்கு துணை நின்ற நிக்கோலஸ் பூரன் வழக்கம் போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ராகுல் அரை சதம் கடந்து 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 3 ரன்களில் வெளியேறினார். பூரன் 4 சிக்ஸர்கள் உட்பட 64 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார்.

இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள்  மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய போல்ட் 2 விக்கெட்டுகளும் சந்தீப், அஸ்வின், பர்கர் மற்றும் சஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.  

Next Story

RR vs LSG: பொறுப்புடன் ஆடிய சஞ்சு; ரன்கள் குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
RR vs LSG ipl live score update sanju samson plays captain knock

ஐபிஎல் 2024 இன் 4ஆவது லீக் ஆட்டம் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே மாலை தொடங்கியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் களம் இறங்கினர். பட்லர் 11 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றினார். அதைத் தொடர்ந்து அதிரடியாய் ஆடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வாலும் 24 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

பின்பு கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. அதிரடியாக விளையாடிய ரியன் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹெட்மயர் 5 ரன்களில் வெளியேறினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபக்கம் பொறுமையாக அதே நேரத்தில் தேவையான நேரத்தில் அதிரடி காட்டி ஆடிய சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்தார். அடுத்து வந்த ஜுரேல் தன் பங்கிற்கு 20 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 82 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். லக்னோ அணி தரப்பில் நவீன் 2 விக்கெட்டுகளும், மொஹ்சின் கான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி அடுத்து களமிறங்க உள்ளது.