ADVERTISEMENT

ரோகித் சர்மாவின் உடல் தகுதி சோதனை முடிவு வெளியானது!

01:05 PM Dec 11, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரரும், துணை கேப்டனுமான ரோகித் சர்மா ஐ.பி.எல். தொடரின்போது காயமடைந்தார். அதன்பிறகு சில போட்டிகளில் விளையாடத ரோகித் சர்மா, ப்ளே-ஆப்ஸ் மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடினார்.

ADVERTISEMENT

இருப்பினும் காயம் முழுமையாக குணமடையாததால் ரோகித் சர்மா, ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஆனால், முழு உடல்தகுதியை விரைவில் எட்டினால், ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் ஆடுவார் என இந்திய அணி நிர்வாகம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து, ரோகித் சர்மா, முழு உடல்தகுதியினை எட்டுவதற்காக தேசிய கிரிக்கெட் அகடாமியில் பயிற்சி பெற்றுவந்தார். மேலும் அவர், வருங்காலத்தில் காயங்கள் மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவை ஏற்படாமல் இருக்க உடலை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுவந்தார்.

இந்தநிலையில், ரோகித் சர்மாவுக்கு இன்று உடல் தகுதி சோதனை இன்று நடைபெற்றது. அச்சோதனையில் ரோகித் சர்மா, தனது முழு உடல் தகுதியை நிருபித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவிற்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பது உறுதியாகிவுள்ளது. மேலும், நாளையே ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவிற்கு புறப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT