இங்கிலாந்தில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியது. நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவர் வரை போராடி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Advertisment

rohit sharma tweet about indian team loss in worldcup

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "நாங்கள் ஒரு அணியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி விட்டோம். வெறும் 30 நிமிட மோசமான ஆட்டத்தால் எங்களது உலகக்கோப்பை வாய்ப்பு பறிபோனது. இதனால் எனது இதயம் மிகவும் கனமாகி விட்டது. இதேபோல் தான் உங்களது இதயமும் ஆகியிருக்கும் என எனக்கு உறுதியாக தெரியும். வெளிநாட்டில் இந்திய அணிக்கு கிடைத்த ஆதரவு அற்புதமானது. நாங்கள் எந்த மைதானத்தில் விளையாடினாலும், அங்கு நீல நிறத்தில் வண்ணம் தீட்டியபடி குவிந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment