இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20 , 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

rohit sharma creates new record in test series

Advertisment

Advertisment

இதில் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், ரோஹித் சர்மா, ரஹானே ஜோடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டது.

சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா சதம் அடித்தார். சேவாக் ஸ்டைலில் சிக்சருடன் தனது சதத்தை நிறைவு செய்தார் அவர். இந்த தொடரில் ரோஹித் சர்மா இதுவரை மொத்தம் 16 சிக்ஸர்கள் அடித்துள்ள நிலையில், ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர் அடித்த மேற்கிந்திய தீவுகள் வீரர் ஹெட்மயேரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹெட்மயேர் 15 சிக்ஸர்கள் விளாசியதே இதுவரை சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.