ADVERTISEMENT

ஸ்மார்ட் பேட், சிப், புது டெக்னாலஜி: வார்னரின் புதிய முயற்சி

12:40 PM Jun 10, 2019 | kirubahar@nakk…

ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் வார்னர் தனது பேட்டில் புது டெக்னாலஜி மூலம் இயங்கும் சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பேட் கொண்டு பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்த வகையான சிப்பை பயன்படுத்த 2017-ஆம் ஆண்டு ஐசிசி அனுமதி வழங்கியது. இதை பற்றிய தெளிவான விழிப்புணர்வு கிரிக்கெட் வீரர்களிடம் அதிகமாக இல்லை. ஆனால் வார்னர் இதன் முக்கியத்துவத்தை அறிந்து வலைப்பயிற்சியின் போது ஸ்மார்ட் பேட் பயன்படுத்தி வருகிறார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பேட் சென்ஸ் எனப்படும் இந்த வகையான சிப்பை பெங்களூரில் உள்ள நிறுவனம் தயாரித்துள்ளது. பேட்டின் மேல் பகுதியில் சிப் பொருத்தப்பட்டுள்ளது. பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்யும் போது பந்தின் வேகத்திற்கு ஏற்ப பேட்டின் நகர்வு இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டின் அசைவு, அதிர்வு போன்றவை மொபைல் மூலம் கிளவ்ட் ஸ்டோரேஜில் சேமிக்கப்படும்.

பேட்டின் வேகம், கையை சுழற்றும் திசை என பல பேட்டிங் அசைவுகளை கணிக்க முடியும் அளவிற்கு சிப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிப்பின் டேட்டா அளவீட்டின்படி வார்னரின் பேட்டின் வேகம் 79 கிமீ அளவு உள்ளது.

இது போன்ற ஸ்மார்ட் பேட் மூலம் பயிற்சியாளர் பேட்ஸ்மேன்களின் தவறை அறிந்து, அவற்றை சரி செய்ய ஆலோசனை வழங்க அதிக அளவில் வாய்ப்புள்ளது. பும்ரா போன்ற டாப் கிளாஸ் ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் ரஷித் கான் போன்ற ஸ்பின் பவுலர்களுக்கு ஏற்றவாறு பேட்ஸ்மேன்கள் விளையாடுவதற்கு இது போன்ற டெக்னாலஜி பெரிதும் உதவியாக இருக்கும்.

கடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் டிரான் கேமரா மற்றும் சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பேட் ஆகிய சில புது டெக்னாலஜி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த தொடரில் பேட்டில் 25 கிராம் எடையுள்ள சிப்பை இங்கிலாந்து வீரர்கள் ஸ்டோக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் பயன்படுத்தினர். இது போன்ற புது புது டெக்னலாஜிகள் கிரிக்கெட் உலகில் கடந்த சில ஆண்டுகளாக பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

இன்ஜினியரிங் படித்த இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அணில் கும்ப்ளே தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் பாப் வூல்மர் உதவியுடன் 1996-ஆம் ஆண்டு இந்திய அணியின் செயல்பாடுகளை ஆராய ஒரு சாப்ட்வேர் அறிமுகப்படுத்த உதவினார். விளையாடும்போதே அவ்வப்போது புது புது டெக்னலாஜிகள் பயிற்சி முகாமில் கொண்டு வர உதவினார்.

2016-ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளேவை கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்களான லக்ஷ்மன், சச்சின் மற்றும் கங்குலி ஆகியோர் தேர்வு செய்தனர். கும்ப்ளே பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்பு இந்திய அணி பயிற்சி முகாமில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினார். புது டெக்னாலஜியின் பயன்பாடுகள் அதிகரித்தன.

இந்திய அணியும் அவரின் பயிற்சியின்போது பல்வேறு சாதனைகள் படைத்தது. அவர் பயிற்சியாளராக இருந்த ஐந்து டெஸ்ட் தொடர்களிலும் வென்றது. டெஸ்ட் போட்டிகளில் 71% வெற்றியை கும்ப்ளே பயிற்சியின் கீழ் இந்திய அணி பெற்றுள்ளது.

அணியில் வீரர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட சில விஷயங்களில் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளேவிற்கும், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக அப்போது கூறப்பட்டது. கும்ப்ளேவின் கோச்சிங் ஸ்டைல் பற்றி அதிருப்தி நிலவுவதாக கோலி பி.சி.சி.ஐ.யிடம் தெரிவித்திருந்தார். ஆனால் கும்ப்ளே விலகியது இந்திய அணிக்கு பெரும் இழப்பாக இருக்கும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு இருந்தார். கும்ப்ளே பயிற்சியாளராக இருந்த போது இந்திய அணி எட்டமுடியாத உயரத்தை அடைந்தது.

இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளே தொடர்ந்து செயல்பட்டு இருந்தால் தற்போது அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் டேட்டா சைன்ஸ் போன்ற பல புது டெக்னாலஜிகள் இந்திய கிரிக்கெட்டில் முன்கூட்டியே பயன்படுத்தப்பட்டு வீரர்களை இன்னும் மேம்படுத்தியிருக்க வாய்ப்புகள் அதிகம்.

சாம்பியன்ஸ் ட்ராபிக்கு பிறகு கும்ப்ளே பயிற்சியாளராக தொடர விரும்பவில்லை என விலகியதை அடுத்த பயிற்சியாளருக்கான நேர்முகத் தேர்வின்போது ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் கங்குலி கலந்து கொள்ளவில்லை.

கும்ப்ளே பயிற்சியாளராக இந்திய அணிக்கு தொடராதது இந்திய அணிக்கு பேரிழப்பு. அவரை பயிற்சியாளராக மட்டும் அல்ல; புது டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்தும் ஒரு இன்ஜினியராகவும் இந்திய அணி மிஸ் செய்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT