இங்கிலாந்து நாட்டில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரரான ஷான் மார்ஷ் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

shaun marsh ruled out of worldcup series

ஆஸ்திரேலியா அணியின் மிடில் ஆர்டரில் மிக முக்கிய வீரரான மார்ஷ் வலைப்பயிற்சி மேற்கொண்ட போது கம்மின்ஸ் வீசிய பந்து அவரது கையில் பலமாக தாக்கியுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஹேண்ட்ஸ்கோம்ப் அணியில் இணைய உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.