ADVERTISEMENT

"சவால்களுக்குத் தயார்" - டெஸ்ட் ஜெர்சியில் நடராஜன்..

10:49 AM Jan 05, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால், இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு நெட் பவுலராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்றார். அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இருபது ஓவர் போட்டிகளுக்கான அணியிலும் சேர்க்கப்பட்டார்.

இருபது ஓவர் போட்டியிலும் சிறப்பாக பந்து வீசி ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் என அனைவரின் பாராட்டையும் பெற்றார் நடராஜன். முன்னதாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறாத நடராஜன், காயம் காரணமாக உமேஷ் யாதவ் தொடரிலிருந்து விலகியதால், அவருக்குப் பதிலாக தற்போது நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நடராஜன், இந்திய அணியின் டெஸ்ட் ஜெர்சியை அணிந்து புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், "இந்திய அணியின் வெள்ளை ஜெர்சியை அணிவது பெருமையான தருணம். அடுத்தகட்ட சவால்களுக்குத் தயார்" என்று கூறியுள்ளார்.

நடராஜனின் பதிவினைத் தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டெஸ்ட் ஜெர்சியில் இருக்கும் அவரின் புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT