ADVERTISEMENT

எந்த தேதியில் மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல்?; இறுதி போட்டி எப்போது? - வெளியான புதிய தகவல்!

03:22 PM Jun 07, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்திருந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் சில நகரங்களில் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் சில அணி வீரர்களுக்கும், அணி உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஐபிஎல் தள்ளிவைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள், கடந்த ஆண்டைப் போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் நடைபெறுமென இந்திய கிரிக்கெட் வாரியம், அண்மையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு அறிவித்தது.

இந்தநிலையில், தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குமென்றும், அக்டோபர் 15ஆம் தேதி தொடரின் இறுதிப்போட்டி நடைபெறும் எனவும் இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT