morris

இந்தியாவில்வருடந்தோறும் நடக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலம், இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 292 வீரர்கள்இன்று ஏலம் விடப்படவுள்ளனர். இந்த ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஜேசன்ராய்ஏலம் எடுக்கப்படவில்லை. கேதார்ஜாதாவையும்எந்த அணியும்முதல் கட்ட ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

Advertisment

ஸ்டீவ்ஸ்மித்தை டெல்லிகேபிட்டல்ஸ் அணி 2.2 கோடிக்குஏலம் எடுத்துள்ளது. மேக்ஸ்வேல் 14.25 கோடிக்கு பெங்களூருஅணியால்வாங்கப்பட்டார்.ஷகிப் அல் ஹசனை 3.20 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்துள்ளது. மொயின் அலியை சென்னை அணி 7 கோடிக்கு வாங்கியுள்ளது. ஷிவம் துபேவை 4.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

கிறிஸ் மோரிஸ்சை ராஜஸ்தான் ராயல்ஸ், 16.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம்போன வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதுவரை அந்தச் சாதனை யுவராஜ் சிங்கிடம் இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment