ADVERTISEMENT

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி! - மாஸ் காட்டிய ஜடேஜா, மொயின் அலி!

11:30 PM Apr 19, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று (19/04/2021) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக டூ பிளஸிஸ் - 33, மொயின் அலி - 26, அம்பத்தி ராயுடு - 27, பிராவோ - 20 ரன்களை எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக பட்லர் - 49, ராகுல் திவாதியா - 20, ஜெயதேவ் உனட்கட் - 24 ரன்களை எடுத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தரப்பில் மொயின் அலி 3, சாம் கரன், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட், பிராவோ, ஷர்துல் தாகூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT