ADVERTISEMENT

ஒலிம்பிக்ஸ்; அயர்லாந்தை வீழ்த்திய பிரிட்டன்- காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

07:04 PM Jul 31, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், மீராபாய் சானு வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். மேலும் பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64-69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

இந்தநிலையில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கியில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவை 4 - 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இருப்பினும் லீக்கில் தான் விளையாடிய ஐந்து போட்டிகளில் 2 மட்டுமே வென்றதால், அயர்லாந்து - பிரிட்டன் அணிகளுக்கிடையேயான போட்டியில் பிரிட்டன் வென்றால் மட்டுமே இந்தியா காலிறுதிக்கு முன்னேறும் என்ற நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில் தற்போது கிரேட் பிரிட்டன் அணி, அயர்லாந்தை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. இதன்மூலம் இந்திய அணி காலிறுதிக்குள் நுழைந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT