indian women hockey

Advertisment

டோக்கியோ ஒலிம்பிக்ஸில், இன்று (02.08.2021) நடைபெற்ற மகளிர் ஹாக்கி காலிறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி, 1 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.

க்ரூப் சுற்றில், தாங்கள் விளையாடிய ஐந்து ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே வென்றிருந்த இந்திய அணி, காலிறுதியில் பலமான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியுள்ளது. ஏற்கனவே இந்த ஒலிம்பிக்ஸில், 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.