ADVERTISEMENT

என்னுடைய கடைசி ஆட்டமான இதில், நான் நினைத்தது போல நடக்கவில்லை- கண்ணீருடன் விடைபெற்ற இந்திய அணியின் பிஸியோ...

12:53 PM Jul 11, 2019 | kirubahar@nakk…

மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத நிலையில் ஜடேஜாவும், தோனியும் சிறப்பாக ஆடி அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றனர். இருப்பினும் கடைசி ஓவர் வரை போராடி இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் நேற்றைய ஆட்டம் இந்திய அணியின் பிஸியோவான பாட்ரிக் ஃபர்ஹாத்தின் கடைசி ஆட்டம் ஆகும்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய அணியின் பிஸியோவாக பணியமர்த்தப்பட்டார். கடந்த 4 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய இவரின் ஒப்பந்தம் முடிந்துள்ள நிலையில், நேற்று இந்திய அணி விளையாடிய போட்டிதான் இவருக்கு இந்திய அணியின் பிஸியோவாக கடைசி போட்டியாக அமைந்தது. இதில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "இந்திய அணியுடன் எனது கடைசி நாள் நான் விரும்பியபடி அமையவில்லை. என்றாலும், கடந்த 4 ஆண்டுகளாக இந்திய அணியுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை அளித்த பிசிசிஐ க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அனைத்து வீரர்கள் மற்றும் உடன் பணியாற்றிய ஊழியர்களுக்கும் அவர்களது எதிர்காலத்திற்கும் எனது வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT