இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில்வரும் 16 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்காக பாகிஸ்தான் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள விளம்பரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

pakistan worldcup ad mocking abhinandan creates ruckus

இந்திய விமானப்படை வீரரை போன்று மேக்கப் செய்யப்பட்ட ஒருவர் இந்தியா ஜெர்சியுடன் டீ அருந்துகிறார். அப்போது இந்திய அணியின் திட்டங்கள் என்ன, எந்தெந்த வீரர்கள் களமிறங்குவார்கள் போன்ற கேள்விகள் அந்த நபரிடம் கேட்கப்படுகிறது. அதற்கு அவர், "மன்னிக்க வேண்டும், என்னால் இதனை கூற முடியாது" என அபிநந்தன் கூறியது போல கூறுகிறார். அதன் பின் அந்த நபர் டீ கப்பை எடுத்துக்கொண்டு நகரும் போது அதனை ஒரு கை வாங்குகிறது. அதன் பின், கோப்பையை மீண்டும் கொண்டுவருவோம் என வருகிறது. அபிநந்தனை கேலி செய்யும் வகையில் எடுக்கப்பட்ட இந்த விளம்பரம் இந்திய ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.