இங்கிலாந்து நாட்டில் நடந்துவரும் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் இந்திய அணி அசத்தி வருகிறது.

Advertisment

most catch drops by any team in icc worldcup 2019

அந்த வகையில் இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை நடந்த ஆட்டங்களில் ஃபீல்டிங் செய்யும்போது அதிக கேட்சுகளை தவறவிட்டவர்களின் பட்டியலில் இந்திய அணி கடைசி இடத்தில் உள்ளது. இதுவரை இந்த தொடரில் 14 கேட்ச்களை தவறவிட்ட பாகிஸ்தான் அணி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து அணி 12 கேட்ச்களை தவறவிட்டுள்ளது.

அதற்கடுத்தடுத்த இடங்களில் நியூஸிலாந்து (9), தென் ஆப்பிரிக்கா (8), மேற்கிந்திய தீவுகள் (6), ஆஸ்திரேலியா (4), வங்கதேசம் (4), இலங்கை (3), ஆப்கானிஸ்தான் (2), இந்தியா (1) கேட்ச்களை விட்டுள்ளன. இதன் மூலம் இந்த தொடரில் ஒரே ஓரு கேட்சை மட்டுமேஇந்திய அணி கோட்டைவிட்டுள்ள செய்தி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.