ADVERTISEMENT

உள்ளே வெளியே ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் மோதல்; வெற்றி வாய்ப்பு யாருக்கு?

08:28 AM Nov 02, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

8 ஆவது டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பிரிவு இரண்டில் இடம்பெற்ற இந்திய அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி அதில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில், இன்று வங்கதேச அணியுடன் விளையாட இருக்கிறது. வங்கதேச அணியும் மூன்றில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒன்றில் தோல்வியுற்றுள்ளது.

வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹஸன் இந்திய அணியுடனான போட்டி குறித்து கருத்து தெரிவித்தார். அதில், “இந்தியா உலகக் கோப்பையை வெல்வதற்காக வந்துள்ளது. ஆனால் நாங்கள் கோப்பையை வெல்வதற்காக வரவில்லை. இந்தியாவிற்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்றால் அது வருத்தமாக இருக்கும். அவர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்களை வருத்தமடையச் செய்ய முயற்சி செய்வோம்” எனக் கூறியுள்ளார்.

வங்கதேசம் உடனான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

இந்த போட்டியில் வங்கதேச அணி வீரர்கள் முழுவீச்சுடன் செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. இந்திய அணியில் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கும் கே.எல்.ராகுலுக்கு பதில் மாற்று வீரர் களமிறக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து குரல்கள் எழுந்து கொண்டு வருகிறது. நேற்றைய பயிற்சியின் போது கூட ராகுலுக்கு விராட் கோலி பேட்டிங் பயிற்சி அளிப்பது போன்ற வீடியோ பதிவு சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவியது.

நியூசிலாந்து சுற்றுப்பயணம்; இந்திய அணி அறிவிப்பு; முன்னணி வீரர்களுக்கு ஓய்வு

இந்திய அணி பயிற்சியாளர் டிராவிட், “ராகுல் சிறந்த வீரர். இந்த ஆடுகளத்தின் தன்மைக்கு அவர் மிகவும் பொருத்தமானவர். இந்த ஆடுகளத்திற்கு இது போன்ற வீரர்கள் தான் தேவை. அவர் பந்தை எதிர் கொள்ளும் விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் உள்ளோம்” என்று கூறியுள்ளார். எனவே இன்றைய போட்டியிலும் ராகுல் விளையாடுவார் என்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மற்ற வீரர்கள் அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். தினேஷ் கார்த்திக் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகமாக இருக்கிறது. போட்டிக்கு முன் அவரது உடற்தகுதியைப் பொறுத்து அவர் ஆடுவது தீர்மானிக்கப்படும்.

“எனது ஹோட்டல் அறையில் கூட ப்ரைவசி இல்லை” - விராட் கோலி வேதனை

இந்திய அணி அடுத்த இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு அமையும். இதே நிலையில் தான் வங்கதேச அணியும் இருக்கிறது. பந்துவீச்சில் வங்கதேச அணியின் தஸ்கின் அகமது மற்றும் முஸ்தபிஸுஇர் ரஹ்மான் அசத்தக் காத்திருக்கின்றனர். இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா ஆட்டம் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல்

இந்தியா: ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், அஸ்வின், முகம்மது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்.

வங்கதேசம்: சவும்யா சர்கார், நஜ்முல் ஹூசைன், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அபிப் ஹூசைன், நுருல் ஹசன், மொசாடெக் ஹூசைன், யாசிர் அலி, தஸ்கின் அகமது, முஸ்தாபிஸூர் ரஹ்மான், ஹசன் மமூத்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT