India squad announced for ODI and Test series against Bangladesh

8 ஆவது டி20உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில்நடைபெற்று வருகிறது.இது முடிந்ததும் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி அங்கு நடைபெற இருக்கும் மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்டகிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருக்கிறது.

Advertisment

20 ஓவர் போட்டிக்கு ஹர்திக் பாண்டியாவும் ஒரு நாள் போட்டித் தொடருக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில், இவை முடிந்ததும் வங்கதேசத்தில் மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட இருக்கிறது. காயத்தால் உலகக் கோப்பையில் விளையாடாத ஆல்ரவுண்டர் ஜடேஜா வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் மூலம் அணிக்கு திரும்புகிறார்.

வங்கதேசம் உடனான ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் : ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகம்மது ஷமி, முகம்மது சிராஜ், தீபக் சாஹர், யாஷ் தயாள்.

Advertisment

வங்கதேசம் உடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் : ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கே.எஸ்.பரத், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.