ADVERTISEMENT

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்- ஆஸ்திரேலிய அணி சாம்பியன்!

03:59 PM Mar 08, 2020 | santhoshb@nakk…

மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5- வது முறையாக ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்திரேலியாவில் மெல்பர்னில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி.

ADVERTISEMENT

முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

ADVERTISEMENT


ஆஸ்திரேலிய மகளிர் அணியில் அதிகபட்சமாக பெத் மூனி 78, ஹீலி 75 ரன்கள் எடுத்தனர். அதேபோல் இந்திய மகளிர் அணி தரப்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 33, வேதா 19, ரிச்சா கோஷ் 18 ரன்கள் எடுத்தனர்.

இந்திய மகளிர் அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளையும், பூனம், ராதா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஆஸ்திரேலிய மகளிர் அணி தரப்பில் மேகன் ஷட் 4, ஜெஸ் ஜோனோசென் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT