ADVERTISEMENT

ஃபினிஷர் வேலையை தோனி வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் -மூத்த வீரர் லாரா பேச்சு!

10:38 AM Oct 10, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஃபினிஷர் வேலையை தோனி வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரர் பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தோனி தலைமையிலானா சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகள், 4 தோல்விகள் பெற்று அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ளது. தோனி உள்ளிட்ட முன்னணி வீரர்களின் சொதப்பலான ஆட்டமும், நிலையான ஆட்டமின்மையும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரரான பிரைன் லாரா தோனியின் ஆட்டம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், "தோனி தனக்கு ஏற்ற மாதிரியான ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அந்த இடத்தில் அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் இருப்பது புதிராக உள்ளது. அவர் சிறந்த ஃபினிஷர் என்பதில் மாற்றமில்லை, ஆனால் அந்த இடத்தை வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT