உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 11 புள்ளிகளுடன், பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. மேலும் இன்னும் 3 போட்டிகளில் ஒன்றில் வென்றாலே இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும்.

Advertisment

ravi shastri about kohli and dhoni

இந்நிலையில் தோனி மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டரில் அவர் போட்டுள்ள பதிவில், தோனி மற்றும் கோலியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, "இரு வேறுபட்ட இயல்புகளை கொண்ட இருவர். ஆனால் இருவருமே மிகச் சிறந்த ஆளுமைகள். இவர்கள் இருவரும் மிகவும் வலிமையானவர்கள் மற்றும் சாம்பியன் வீரர்கள்” எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த ட்வீட் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.