dhoni

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 52 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 17.4 ஓவரில் 181 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. வாட்சன் 53 பந்துகளில் 83 ரன்களும், டு பிளஸிஸ் 53 பந்துகளில் 87 ரன்களும் குவித்தனர். தொடர் மூன்று தோல்விகளைசந்தித்து வந்த சென்னை அணிக்கு, இப்போட்டியில் கிடைத்த வெற்றி புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இந்நிலையில், சென்னை அணியின் கேப்டனான தோனி இந்த வெற்றி குறித்துபேசியுள்ளார்.

Advertisment

அதில் அவர், "சிறிய விஷயத்தை மட்டும் தான் மாற்றம் செய்தோம். அது எங்களுக்கு முக்கியமான ஒன்றும் கூட. பேட்டிங்கில் நல்ல தொடக்கம்கிடைத்தது. நாங்கள் எதிர்பார்த்ததும் அதுதான். வரவிருக்கும் போட்டிகளிலும் இது தொடரும் என்று நம்புகிறோம்" என கூறினார்.

Advertisment