ADVERTISEMENT

இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு!

01:42 PM Nov 12, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வரும் 27-ம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு, அவ்வீரர்கள் நேற்று ஆஸ்திரேலியா புறப்பட்டனர்.

ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை மட்டும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முதற்கட்டமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி -

மிட்ஷெல் ஸ்வீவ்ஸன், மாத்யூ வேட், டேவிட் வார்னர், வில் புக்கோவ்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்ஷெல் ஸ்டார்க், சீன் அபாட், ஜோ பர்ன்ஸ், பாட் கம்மின்ஸ், கேமரூன் க்ரீன், ஜோஸ் ஹேசல்வுட், ட்ரீவிஸ் ஹெட், மமஸ் லாபுஷேன், நாதன் லியோன், மைக்கேல் நீஸர், டிம் பெய்ன், ஜேம்ஸ் பட்டின்ஸன்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது டிசம்பர் மாதம் 17-ம் தேதி தொடங்க இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT