Candice Warner

Advertisment

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இரண்டாவது போட்டியின்போது ஆஸ்திரேலிய அதிரடி வீரரான டேவிட் வார்னர் காயமடைந்தார். இந்திய வீரர் தவான் அடித்த பந்தை தடுக்க முயன்றபோது அவருக்கு இடுப்புப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டித்தொடரில் இருந்து அவர் விலகினார். மேலும், அவர் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கெடுப்பது குறித்தும் எந்த உறுதியான தகவலும் இல்லை.

இந்நிலையில், டேவிட் வார்னரின் மனைவியான கேண்டீஸ் வார்னர் ஆஸ்திரேலிய வானொலி ஒன்றிடம் இது குறித்து பேசுகையில், "இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி துவங்க 17 நாட்கள் உள்ளது. ஆகையால் அவர் தயாராகிவிடுவார் என்று நினைக்கிறேன். காயத்தின் தன்மை தீவிரமாக உள்ளது, அவருக்கு அதிகம் வலி உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியைத் தவறவிட அவர் விரும்பவில்லை" எனக் கூறினார்.