'For those who send hate messages...' - Australia cricketer Maxwell's wife explains

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. நேற்று நடந்த இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

Advertisment

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா தோற்றதால், அத்தோல்வி ரசிகர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது. இதனால் இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். அதே வேளையில் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டு ஆஸ்திரேலியா அணி வீரரான மேக்ஸ்வெல்லின் மனைவி வினி மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியாவின் வெற்றியை கொண்டாடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதனால், தனக்கு எதிராக ரசிகர்கள் சிலர் வெறுப்புடன் மெசேஜ்களை அனுப்புவதாக வினி மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “வெறுப்புடன் தனிப்பட்ட முறையில் எனக்கு மெசேஜ் அனுப்புபவர்கள் கொஞ்சம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். நான் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு ஆதரவாக இருக்க வேண்டிய அதே சமயம், என் குழந்தையின் அப்பாவாக இருக்கும் என் கணவர் விளையாடும் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும். இது சிலருக்குப் புரிவதில்லை. உலகிற்கு எது முக்கியமோ, எது முக்கியமான பிரச்சனைகளோ அதில் கவனம் செலுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.