ADVERTISEMENT

இந்திய அணி குழுவை சேர்ந்த ஏழு பேருக்கு கரோனா - மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ!

10:57 AM Feb 03, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர், வரும் 6 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தநிலையில் இந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாட இருந்த ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட நவதீப் சைனி ஆகியோருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

அதேபோல் இந்திய அணையின் பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப், பாதுகாப்பு தொடர்பு அதிகாரி பி லோகேஷ், ஸ்போர்ட்ஸ் மசாஜ் தெரபிஸ்ட் ராஜீவ் குமார் உள்ளிட்டவர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணியில் மயங்க் அகர்வால் மாற்று வீரரராக சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என கருதப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT