Skip to main content

இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: ஓப்பனர்கள் யார்? - விராட் கோலி பதில்!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

rohit - kl - dhawan - vk

 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. ஏற்கனவே, நடந்த டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதனைத் தொடர்ந்து, நாளை முதல் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.

 

ரோகித், தவான், கே.எல் ராகுல் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றிருப்பதால், இந்த தொடரில் யார், யார் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்குவர் என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில், இருபது ஓவர் தொடரையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி, இந்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

 

தொடக்க ஆட்டக்கார்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த விராட், "இது மிகவும் எளிது. ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். ஷிகர் தவான் பேக்-அப்பாக இருப்பார். இந்த தொடருக்கு ரோகித் - கே.எல்.ராகுல் எங்களது தொடக்க ஆட்டக்காரர்களாக இருப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

 

காயம் காரணமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்கு வரும் புவனேஸ்வர் குமார் குறித்து பேசிய விராட் கோலி, அவர் திரும்ப வருவது மகிழ்ச்சி. இந்தியாவின் மேலும் பல வெற்றிகளுக்குப் பங்களிக்க அவர் ஆர்வமாக உள்ளார். அவர் இங்கிருந்து வலிமையாக உருவாவார் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

 

 

 

Next Story

RCB vs PBKS; நிதானமாக ஆடிய பஞ்சாப் கிங்ஸ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

RCB vs PBKS ipl live score update dhawan plays important knock

ஐபிஎல் 2024 ஆறாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவரான பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த பிரப் சிம்ரன் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் தவான்  பொறுப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாம் கரண்,  ஜித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு அதிரடி காட்டியது. சாம் கரண் 17 பந்துகளில் 23 ரன்களும் ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் சஷாங் சிங்கின் 21 ரன்கள் பஞ்சாப் அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடி வருகிறது. 6 ஓவர்கள் முடிவில் 50 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் டுபிளசிஸ் 3 ரன்களில் வீழ்ந்தார். க்ரீன் 3 ரன்களில்  ஆட்டமிழந்தார். கோலி 35 ரன்களுடனும், பட்டிதார் 3 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

Next Story

கவாஸ்கரின் சாதனையை சமன் செய்த ரோஹித்; அதிரடியாக ஆடி வரும் இந்திய அணி!

Published on 08/03/2024 | Edited on 09/03/2024
Rohit's uncanny century-scoring partnership; The Indian team is swinging in action!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரைசதம் கடந்து 79 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 29 ரன்களில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்த நட்சத்திர ஆட்டக்காரர்  ஜோ ரூட் 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில் ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Rohit's uncanny century-scoring partnership; The Indian team is swinging in action!

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கியது. சிறப்பான தொடக்கம் தந்த  ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அரைசதம் கடந்தனர். ஒரே ஓவரில் மூன்று சிக்சர்களைப் பறக்க விட்ட ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ரோஹித் அரைசதம் கடந்து 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

பின்னர் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் மற்றும் கில் சிறப்பாக ஆடினர். 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என அதிரடியாக ஆடிய அவர், இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். இது டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் 12 ஆவது சதமாகும் மற்றும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இங்கிலாந்துக்கு எதிராக இது 4 ஆவது சதமாகும். இதன் மூலம் தொடக்க ஆட்டக்காரராக இங்கிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள் எனும் இந்திய முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து கில்லும் சதமடித்தார்.ஆனால் சதமடித்த வேகத்திலேயே இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் இறங்கிய படிக்கல் மற்றும் சர்பிராஸ் இணை அதிரடியாக ஆடி வருகிறது. தற்போது இந்திய அணி 72 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. 7 பவுண்டரிகளுடன் படிக்கல் 31 ரன்களுடனும், சர்பிராஸ் 8 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

வெ.அருண்குமார்