rohit rahane virat

Advertisment

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடிவரும் இந்திய அணி, அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவதாகஇருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்கா நாட்டில் ஒமிக்ரான் வகை கரோனாபரவிவருவதால், இந்திய அணிதென்னாப்பிரிக்காவுக்குச் செல்லுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், இந்திய அணி திட்டமிட்டபடி தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று, மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடும் எனவும், இரு அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர் தொடர் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார்.

இந்நிலையில்தென்னாப்பிரிக்காவுக்குஎதிரான தொடரில், தொடர்ந்து மோசமான ஃபார்மில் இருந்துவரும் ரஹானேவுக்கு பதில் ரோகித் சர்மா, இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாகதகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

அண்மையில் ரோகித் சர்மா, இந்திய இருபது ஓவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.