ADVERTISEMENT

கிணறுக்குள் சொர்க்கம் இருக்கிறதா ...

03:10 PM Feb 08, 2019 | Anonymous (not verified)

ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு ஆழ்ந்து யோசிக்க வேண்டும். செய்கிற காரியம் சரியானதுதானா என்று யோசிக்க வேண்டும். அதனைச் செய்வதற்குத் தேர்ந்தெடுத்திருக்கும் வழிமுறை சரியானது தானா என்று யோசிக்க வேண்டும். இப்போது நரி கதை ஒன்றைப் பார்க்கலாம். வெயில் அனலாகக் கொதித்த ஒரு நண்பகலில் நரிக்கு ரொம்ப தாகம் எடுத்தது. எங்கேயாவது குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா என்று தேடி அலைந்தது. அப்போது கிணறு ஒன்றைக் கண்டது. எட்டிப் பார்த்தபோது உள்ளே தண்ணீர் இருப்பதைப் பார்த்தது. ஆனால் எப்படி கிணற்றுக்குள் இறங்கித் தண்ணீரைக் குடிப்பது என்று யோசித்தது. அங்கே உருளையில் கயிறு கட்டி வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அந்த வாளியில் போய் அமர்ந்தது. உடனே வாளி சர்ரென்று கிணற்றுக்குள் சென்றது. ஆசை தீர தண்ணீரைப் பருகி தாகம் தணித்தது நரி.அதன்பின்னர்தான் எப்படி வெளியே செல்வது என்ற பயம் ஏற்பட்டது. கிணற்றில் இருந்து வெளியே செல்ல வழிதெரியாமல் தவித்தது. அப்படியே மாலை வந்துவிட்டது. தன்னால் கிணற்றை விட்டு வெளியே வரவே முடியாதோ என்ற அச்சம் அதற்குத் தோன்றி விட்டது.

ADVERTISEMENT

அந்த நேரத்தில் ஓநாய் ஒன்று கிணற்றுக்கு மேலே இருந்து கீழே எட்டிப் பார்த்தது. அங்கே நரி இருப்பதைப் பார்த்து, கிணற்றுக்குள் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டது. இங்கே ஒரு சொர்க்கம் இருப்பதே எனக்கு இதுவரை தெரியாமல் போயிற்று. உள்ளே மீன், கோழி என்று வாய்க்கு சுவையான உணவெல்லாம் தருகிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது.என்று கதை விட்டது நரி. இதைக்கேட்டதும் ஓநாய்க்கும் சொர்க்கத்தை அனுபவிக்கும் ஆசை வந்தது. நானும் அங்கே வரமுடியுமா? என்று ஆசையோடு நரியைப் பார்த்துக் கேட்டது. இந்தக் கயிற்றின் மறுமுனையில் இன்னொரு வாளி கட்டப் பட்டுள்ளது. அதிலேறி அமர்ந்து கொண்டால் உள்ளே வந்து விடலாம். என்றது நரி. ஓநாயும் கொஞ்சம்கூட யோசிக்காமல் மறுமுனையில் கட்டப் பட்டிருந்த வாளியில் ஏறி அமர்ந்தது. உடனே அந்த வாளி சர்ரென்று கிணற்றுக்குள் சென்றது. நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது. அப்போது நரி ஓநாயைப் பார்த்து சொன்னது, நான் இப்போது சொர்க்கத்தை விடவும் மேலான ஒரு இடத்திற்கு வந்துவிட்டேன் என்று சிரித்தபடி சொல்லிவிட்டு

ADVERTISEMENT

ஒரு செயலைச் செய்கிறபோது அதற்கு ஏற்படும் தடங்கல்கள் என்னவாக இருக்கும் என்பதில்தான் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். அதனை அடிப்படையாக வைத்தே நீங்கள் யோசிக்க வேண்டும்.அதேபோல வெற்றி அடைந்த ஒருவரைப் பார்த்து, அவர் எந்த வழிமுறையைப் பயன்படுத்தி வெற்றியைப் பெற்றாரோ அதே வழியில் வெற்றியைப் பெற வேண்டும் என்று நினைப்பதும் தவறான நடவடிக்கையாகவே இருக்கும். வெற்றியை நோக்கிச் செல்கிறபோது அதனைப் பயன்படுத்தும் வழிமுறைகளை அப்படியே காப்பியடிப்பதும் தவறு. மிக நுணுக்கமான சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ளாமல் இருந்துவிட்டால் அதனால் எதிர்மாறான விளைவுகளைச் சந்திக்கவும் நேரிடலாம்.அதற்காக வெற்றி பெற்றவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றக் கூடாது என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. ஆனால் அதனைப் பின்பற்றும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது மிகமுக்கியம்.ஆழ்ந்த யோசனை மட்டுமே உங்களை முன்னேற்றப் பாதையை நோக்கி இழுத்துச் செல்லும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT