Skip to main content

ஊதியமே தேவையில்லை , டம்ளரை கீழே வையுங்கள்...

Published on 08/02/2019 | Edited on 09/02/2019

பிரச்சனை வராமல் இருந்தால் அது மனித வாழ்க்கை முழுமை ஆனதாக இருக்காது.ஆனால் பிரச்சனையை சுமந்து கொண்டே திரிந்தால் அது மனித வாழ்க்கையை முழுமை அடையவே விடாது.தனக்கு ஏற்பட்ட சங்கடத்தை, இன்னலை ஒவ்வொருவரிடமாக சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதுவும் ஒரே நாளில் அதை சொல்லி முடிப்பதும் கிடையாது. பல நாட்களாக அந்தக் கதை ஓடிக் கொண்டே இருக்கும்.இவ்வாறு அந்தப் பிரச்சனையில் தொங்கிக் கொண்டே இருப்பதால் அதற்கு நல்ல தீர்வு கிடைத்துவிடுமா?அப்புறம் ஏன் அதைப்பிடித்துத் தொங்கிக் கொண்டே இருக்க வேண்டும்? தைவிடவும் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து யோசனை கேட்டாலும் பிரயோஜனமாக இருக்கும்.பலரும் இந்த எளிய உண்மையைப் புரிந்து கொள்ளாமல் மற்றவர்களையும் சங்கடப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இங்கே பிரபல விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸின் வாழ்வில் அவருக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனையை அவர் எவ்வாறு எதிர்கொண்டார் என்பதைப் பார்க்கலாம்.
 

teacher confident speech

கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார் சந்திரபோஸ். அப்போது அங்கு பணியாற்றிய ஆங்கிலேயப் பேராசிரியர்களுக்கு எந்தவகையிலும் குறைவில்லாத வகையில் சிறப்பான திறமை பெற்றிருந்தார் அவர்.ஆனாலும் பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்ததால் ஆங்கிலேயர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பாதிதான் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.அப்படித்தான் ஜகதீஷ் சந்திரபோஸ் இந்தியர் என்ற காரணத்தால் குறைவான சம்பளம் வழங்கப்பட்டது. இது அவருக்கு உறுத்தலாக அமைந்தது. இதற்காகப் பலரிடமும் பிரச்சனையைப் பற்றிக் குமுறிக் குமுறி கொந்தளிப்பதை அவர் விரும்பவில்லை. மாறாக பிரச்சனையைத் தைரியமாக எதிர்க்கத் தீர்மானித்தார்.‘ஊதியமே தேவையில்லை’ என்று திட்டவட்டமாகக் கூறி தொடர்ந்து பணியாற்றினார். இவ்வாறு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார் ஜகதீஷ் சந்திரபோஸ்.இவரது நேர்மையையும், திறமையையும் பார்த்த ஆங்கிலேய அரசு அதன்பின்னர் ஆங்கிலேயர்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க முடிவு செய்தது. அத்துடன் மூன்று ஆண்டு நிலுவைத் தொகையையும் சேர்த்து அவருக்கு வழங்கியது.பிரச்சனையைக் காந்தீய வழியில் எதிர்கொண்டார் அவர்.ஒவ்வொருவரும் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருக்காமல் அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளில் தைரியமாக ஈடுபட வேண்டும்.எந்தவொரு பிரச்சனையைப் பற்றியும் பிறரிடம் சொல்லிக் கொண்டே இருந்தால் மனதிற்கு வேண்டுமானால் அப்போதைக்கு ஆறுதலாக இருக்குமே தவிர, பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்காது.

ஒருநாள் வகுப்பறையில் கண்ணாடி டம்ளர் ஒன்றைக் கையில் எடுத்த ஆசிரியர், ‘இது எவ்வளவு எடை இருக்கும்?’ என்று மாணவர்களிடம் கேட்டார்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு எடையைச் சொன்னார்கள்.‘‘உண்மையிலேயே இதன் எடை எனக்கும் தெரியாது. இந்தக் கண்ணாடியைக் கையில் பிடித்துக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்?’’ என்று கேட்டார்.‘‘ஒன்றும் ஆகாது சார்’’ என்று கோரஸாகப் பதில் வந்தது.ஒரு மணி நேரம் தொடர்ந்து பிடித்துக் கொண்டே இருந்தால்? ,உங்கள் கை வலிக்கும் சார்’’,‘‘நாள் முழுக்க அப்படியே பிடித்துக் கொண்டிருந்தால்? உங்கள் கை மரத்துப் போகும் சார் , ஒரு மணி நேரத்தில் வலிக்கும் கை, ஒரு நாள் சென்றால் மரத்துப் போகும் என்றால் இந்த டம்ளரின் எடை அதிகரித்துக் கொண்டே இருக்குமா?’’ என்று கேட்டார் ஆசிரியர்.இதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் மாணவர்கள் விழித்தனர்.‘‘சரி விடுங்கள். என் கை மரத்துப் போகாமல் இருக்க வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும்?, டம்ளரைக் கீழே வைத்துவிட வேண்டும்,சரியாகச் சொன்னீர்கள். இப்போது விஷயத்திற்கு வருகிறேன். இந்த டம்ளரை பிரச்சனை என்று வைத்துக் கொள்ளுங்கள். பிரச்சனை வந்தால் உடனே அதனை நமது தலைக்குள் ஏற்றி சுமக்க ஆரம்பிக்கிறோம். ஒரு மணி நேரம் சுமந்தால் தலை வலிக்க ஆரம்பிக்கும். நாள் முழுவதும் சுமந்தால் தலை மரத்துப் போகும். இரத்த ஓட்டம் தடைப்படுவதால் மூளை செயலிழந்து உடம்பு முழுவதும் மரத்துப் போய்விடும். அவ்வாறு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?’’ என்று ஆசிரியர் கேட்டார்.‘‘பிரச்சனையைத் தூக்கி எறிந்துவிட வேண்டும்’’ என்றார்கள் மாணவர்கள்.ஆம் பிரச்சனையை சுமந்து கொண்டே திரியாமல் அதனைத் தூக்கி எறிந்துவிட வேண்டும்.

Next Story

தனிமையை போக்குவதற்கு அமைச்சரை நியமித்தது ஜப்பான்!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

Tetsushi Sakamoto

 

ஜப்பான் நாட்டில் தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 11 வருடங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த ஒரு வருட காலமாக அங்கு தற்கொலைகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அங்கு 2,153 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது அம்மாதத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரழந்தவர்களை விட அதிகம்.

 

தனிமையாக உணருபவர்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்வதால், தங்கள் நாட்டு குடிமக்களின் தனிமையைப் போக்குவதற்காக ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, டெட்சுஷி சாகாமோட்டோ என்பவரை தனிமை அமைச்சராக நியமித்துள்ளார். தனிமை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இவர், குடிமக்களின் தனிமையையும், சமூகத்தில் தனித்திருக்கும் நிலையையும் குறைக்க நடவடிக்கை எடுப்பார். டெட்சுஷி சாகாமோட்டோ, ஏற்கனவே ஜப்பானில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தனிமையைப் போக்குவதற்கான அமைச்சரை ஏற்கனவே இங்கிலாந்து நியமித்துள்ளது. ஆஸ்திரேலியாவும் தனிமையைப் போக்குவதற்கான அமைச்சரை நியமிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.

 

 

Next Story

மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

wife passes away due to husband worse treating sentenced to life imprisonment...
                                                            ஆனந்த்

 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கோட்டகரையைச் சேர்ந்தவர் 28 வயதான ஆனந்த். இவரது மனைவி நவநீதம் (25). இவர்கள் இருவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு, பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் திருமணம் நடைபெற்றது.

 

இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர். ஆனந்த் தச்சு வேலை செய்து வருகிறார். தினசரி உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை, குடும்பம் நடத்துவதற்கு மனைவியிடம் கொடுக்காமல், குடித்துவிட்டு மனைவி நவநீதத்தைக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

 

அதோடு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை அடித்து உதைத்துச் சித்ரவதை செய்துவந்துள்ளார். இந்தநிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி, வழக்கம் போல குடிபோதையில் வீட்டுக்குச் சென்ற ஆனந்த், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்துள்ளார்.

 

தகராறு நடக்கும்போது வீட்டில் இருந்த குறுவாளை எடுத்து மனைவி நவநீதம் தலையில் வெட்டியுள்ளார். இதனால், படுகாயமடைந்த நவநீதம் சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து  நவநீதத்தை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். சில தினங்களில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நவநீதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இதுகுறித்து அவரது தந்தை ஏழுமலை அளித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில், அனைத்துத் தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி சாந்தி அவர்கள் இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார்.

 

அந்தத் தீர்ப்பில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலைசெய்த கணவன் ஆனந்துக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார். சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்தை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அடைத்தனர்.

 

இவ்வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ராதிகா செந்தில் ஆஜராகி, தகுந்த ஆதாரங்களுடனும் சாட்சிகளுடனும் வாதாடி குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்க வழி செய்துள்ளார். மனைவியைக் கொலை செய்த கணவனுக்கு ஆயுள்தண்டனை கிடைத்துள்ளது விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.