ADVERTISEMENT

தாம்பத்தியம் சார்ந்த பிரச்சனைகளே விவகாரத்துக்கு முக்கிய காரணம் - மருத்துவர் ராஜேந்திரன் விளக்கம்!

02:50 PM Mar 19, 2020 | suthakar@nakkh…


தற்போதைய சூழ்நிலையில் விவகாரத்து வழக்குகள் அதிகமாகி கொண்டிருக்கும் இந்த வேளையில், என்ன காரணத்துக்காக விவகாரத்துக்கள் ஏற்படுகின்றது, எவ்வாறு அதனை குறைப்பது முதலியவற்றை பற்றி மனநல மருத்துவர் மருத்துவர் ஆர்.எஸ் ராஜேந்திரன் விரிவாக பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " வாழ்க்கை என்பது ஒரு முறைதான். அடுத்த முறை பிறப்போமா என்று தெரியாது. அப்படி பிறந்தாலும் இதே அப்பா, அம்மா, இதே மனைவி மக்கள் கிடைப்பார்களா என்று தெரியாது. இப்போது கிடைத்துள்ளார்கள். அருமையான வாழ்க்கை ஒருமுறைதான் அமையும். அதை வாழ்ந்தால் என்ன என்பதே என்னுடைய கேள்வி. நான் மதுரை மாவட்டத்தில் குடும்பநல நீதிமன்றத்தில் ஆலோசகராக இருந்துள்ளேன்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


அங்குச் சென்ற பிறகு குடும்பத்தில் நடக்கும் ஏராளமான பிரச்சனைக்களுக்காகத் தம்பதியினர் அங்கு வருவதை பார்த்திருக்கிறேன். என்ன காரணத்துக்காக வருகிறீர்கள், எதற்காக விவகாரத்து கேட்கிறீர்கள் என்றால் பல்வேறு விதமான பதில்களைத் தம்பதியினர் தெரிவிப்பார்கள். முக்கியமாக விவகாரத்துக்கு 80 சதவீத காரணம் தாம்பத்திய உறவுதான். தாம்பத்திய உறவு ஒரு தெய்வீக உறவு. அதை யாரும் முறையாக புரிந்துகொள்ள வில்லை. அடுத்து பத்து விழுக்காடு ஈகோ பிரச்சனை. நான் பெரியவனா, நீ பெரியவளா என்ற காரணத்தால் ஏற்படும் சண்டைகள் இந்தப் பத்து சதவீதத்தில் வந்துவிடுகின்றது. அடுத்து ஏழு விழுக்காடு அந்தக் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தலையிடுவதால் ஏற்படுகின்றது. மீதி மூன்று விழுக்காடு வரதட்சனை காரணமாக ஏற்படுகின்ற விவகாரத்து. தற்போது வரதட்சனை காரணமாக ஏற்படுகின்ற விவகாரத்துகள் குறைந்துள்ளன.

இதில் 80 சதவீத விவகாரத்துக்கள் தாம்பத்தியம் சார்ந்தே இருக்கின்றது. இந்தியாவிலோ அல்லது நம்முடைய தமிழகத்திலோ பாலியல் சார்ந்த கல்வி முறையாகச் சொல்லிக் கொடுப்பதே இல்லை. கையை திறந்து காட்ட வேண்டும். இவ்வளவுதான் பாலியல் என்று வெளிப்படுத்த வேண்டும். அது இல்லாத காரணத்தால்தான் இவ்வளவு வழக்குகள், கள்ளக்காதல் பிரச்சனைகள் நாட்டில் ஏற்படுகின்றது. மனித வாழ்க்கை என்பது ஒருமுறைதான். அதனால் இப்போதே சந்தோஷமாக வாழ்ந்துவிட வேண்டும். நல்ல அப்பா, அம்மா, மனைவி மக்கள் இருக்கும் போதே அதனை நாம் சிறப்பான முறையில் வாழ்ந்துவிட வேண்டும். கையைவிட்டு போன பிறகு நாம் எதையும் செய்ய முடியாது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் அதனைத் தன்னுடைய திருக்குறளில் கூறியுள்ளார். அறம் பொருள் இன்பம் ஆகியவற்றை வெவ்வேறு படிநிலைகளில் அவர் விவரித்துள்ளார். ஆனால் அவர் அனைத்தையும் இரண்டு வரிகளில் முடித்துவிட்டார். மனிதனுக்கு உடலும் உள்ளமும் சேர்ந்துதான் இருக்கிறது. ஆனால் உடலுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் உள்ளத்துக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.

எங்களிடம் கவுன்சிலிங் வருபவர்களிடம் என்னதான் பிரச்சனை என்று கேட்போம். ஒருவர் வாதி, மற்றொருவர் பிரதிவாதியாக இருப்பார்கள். வருகிறவர்களிடம் என்ன பிரச்சனை என்று கேட்டால் இவளை எனக்குப் பிடிக்கவில்லை, விவகாரத்து கொடுங்கள் என்று கேட்பார்கள். அந்தப் பெண்ணிடம் கேட்டால் இவருக்கு ஆண்மையில்லை எனக்கு விவகாரத்து கொடுங்கள் என்று கேட்பார்கள். திருமணத்தை இருவருமே புனிதமாக நினைப்பதில்லை. கண்ணை கசக்கிக்கொண்டு நீதிமன்றம் செல்கிறார்கள், இல்லை போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார்கள். இது தேவையில்லாதது. நம் தலைக்கு மேல் மின்விசிறி இருக்கு, அதை நிறுத்த வேண்டுமானால் சரியான பொத்தானை அழுத்தினால்தான் மின்விசிறி நிற்கும். அதைப் போல சரியான மருத்துவரிடம் போய் குறைகளைச் சொல்லி நிவர்த்தி அடையுங்கள். சரி செய்ய முடியாதது எதுவுமில்லை" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT