ADVERTISEMENT

'கொரோனாவும் மாங்காவும்'

10:16 AM Apr 09, 2020 | suthakar@nakkh…

அலை கடலுக்கு அணை போட முடியுமா? தலைசுற்றியது போல் உணர்ந்த அடுத்த ஒரு நொடியில் சாப்பிட்டது அனைத்தும் வெளியேறியது மஞ்சுவுக்கு. மதினி போட்ட ''ஓங்கார'' சத்தத்தில் மூன்று நாத்தனார்களும் போட்டது போட்டபடி ஓடி வந்தனர். என்ன மதினி வயித்துக்குள்ள பையன் ரொம்ப படுத்துறானா?.. நெற்றியைப் பரிவுடன் தாங்கிப் பிடித்தாள் மூத்த நாத்தனார் பவானி.அறைக்கு உள்ள அமைதியா ஆடுனா அம்பலத்துல இப்படிதான் சத்தம் போட்டாகணும் மதினி.இந்தாங்க மோர் சாப்டுங்க என்றாள் ''சின்ன நாத்தி'' சித்ரா மெல்லிய கேலி சிரிப்புடன்.மழை வருவதும் பிள்ளை பெறுவதும் அந்த மகாதேவனுக்கே தெரியாது மதினி.என்ற படியே ஊறுகாய் எடுத்து வந்தாள் இன்னொரு ''நாத்தி'' கோமதி. மூன்று பேரையும் ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தாள் மஞ்சு.இந்த மோரையும் ஊறுகாயையும் இன்னும் எத்தனை நாளுதான் கண்ணுல காமிச்சுகிட்டு இருப்பீங்க. எனக்கு ''மாங்காய் வேணும்,அறுத்து உப்பு மிளகாய்த்தூள் தடவி''.சுத்தமான ஒரிஜினல் ''நாத்தி'' களா இருந்தா ஏற்பாடு பண்ணுங்க பாக்கலாம்.

ADVERTISEMENT



ஐயோ மதினி...கரோனா ஊரடங்கு நேரத்துல போயி மாங்காய் கேட்குறீகளே சாதாரணமா கிடைக்குற காய்கறிகளே சரியா கிடைக்க மாட்டேங்குது. அதெல்லாம் தெரியாது.என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்கு மாங்கா வேணும் .


வயித்துப் பிள்ளைக்காரி கேட்டுட்டா.சொந்த மதினி வேற.இருங்க சுமதி வீட்டுல மாமரம் இருக்கு,போய் பாத்துட்டு வர்றேன் என்று கிளம்பினார்கள்.சுமதி வீட்டில் மரம் இருந்தது.பிஞ்சு கூட வைக்கவில்லை.இப்போதுதான் பூப்பூத்து இருந்தது. வாங்க வாங்க.ஒரு குரூப்பா வந்துருக்கீங்களே என்ன விஷயம்? என்றாள் சுமதி வந்த கதையைச் சொன்னார்கள் மூவரும்.இப்ப என்ன மஞ்சுவுக்கு மாங்காய் வேணும்,அவ்வளவுதான,அதுக்கு ஒரு வழி இருக்கு என்றாள் சுமதி.எப்படி? கடையே கிடையாது ஊரடங்குவேற மூவரும் வாயைப் பிளந்தார்கள்.ஒரு கட்டைப்பை மட்டும் எடுத்துக்கங்க என்றாள் சுமதி.முகத்துக்கு ''கரோனா மாஸ்க் போட்ட மகளிர்படை'' மாங்காய் வேட்டைக்கு கிளம்பியது,சுமதி தலைமையில்.

ஊருக்கு ஒதுக்குபுறம் உள்ள உள்ள மாந்தோப்பு.கொத்துக் கொத்தாக தொங்கிய மாங்காய்களைப் பார்த்த அவர்களின் நாக்கு மற்றும் வாய்ப் பிரதேசங்கள் மட்டுமல்ல உடம்பில் ஓடும் ரத்தம் முழுவதும் புளிப்பு சுவைக்கு மாறி உடம்பே சிலிர்த்தது.உயரமான காம்பவுண்டு சுவரும் வேலியும் சாதாரணமாகிப் போனது நம் மகளிர் படைக்கு.சரவணா ஸ்டோர் பெரிய பை நிரம்பியது.ஆசை வெட்கம் அறியாது என்பது போல சுடிதார் துப்பட்டாவிலும் முடிந்து கொண்டனர்.கணீரென ஒரு குரல்.''யாரது தோட்டத்துல மாங்கா திருடறது''.நல்ல ஆஜானுபாகுவான மனிதர்.சினிமா ஹீரோக்களை நினைவு படுத்துவது போல 6 அடி உயரத்தில். கையில் 5 அடி உயரத்தில் சிலம்பு விளையாடும் கம்பு.சிக்கிக் கொண்ட மகளிர்படை பையில், துப்பட்டாவில் உள்ள மாங்காய்கள் அத்தனையையும் அவருக்கு முன் பரப்பி வைத்தது.அப்ப வருஷ வருஷம் மாங்காய் திருடறது நீங்கதானா? முறைத்தபடி கேட்டார்.

ADVERTISEMENT


அதெல்லாம் இல்லீங்க ஐயா, இப்பதான் அதுவும் இன்னைக்கு தான் முதல்முதலா உங்க தோட்டத்துக்கு வந்துருக்கோம்,இது சுமதி.கட்டைப்பை என்னுது இல்லீங்க, இது கோமதி. சுடிதார் டாப்ஸ்ல மட்டும்தாங்க நான் எடுத்தேன்,இது பவானி.எங்க மதினி மசக்கையில் குமட்டி குமட்டி வாந்தி எடுக்கறாங்க அதுக்குதான் வந்தோம்,இது சித்ரா.ஏம்மா ஊருல உள்ள எல்லோருக்குமே மசக்கையா ? நூறு மாங்காயா பறிப்பீங்க.என்கிட்டே கேட்டுருந்தா,நாலு மாங்கா நானே குடுத்து இருப்பனே! உங்க வீட்டுல இருந்து யாராவது ஆம்பளைங்க வந்து சொன்னாத்தான் உங்களை விடுவேன்.உங்கள்ல யாராவது ஒருத்தரு போய் கூப்புட்டு வாங்க போங்க...அரைக் காசுக்கு போன மானம் ஆயிரம் பணம் குடுத்தாலும்வராது என்பது போல ஆகி விட்டது நம்ம மகளிர் படைக்கு. .

எங்க தெரு வழியாதான் உங்க காரு தினமும் போகும் வரும்.நாங்க பாத்துருக்கோம்.இது உங்க தோட்டமுன்னு எங்களுக்கு சத்தியமா தெரியாது. முன்ன ஒரு முறை புயலும் வெள்ளமும் வந்தப்ப கூட சாப்பாடு,போர்வை, துணிகள்னு நீங்க ''எங்க ஊர் காரங்களுக்கு நிறைய உதவி எல்லாம்'' செஞ்சிருக்கீங்க.அவ்வளவு நல்ல மனுஷன் நீங்க.ஒரு பொண்ணுக்குத் தலை பிரசவம் என்பது மறுபிறவி போல.கரணம் தப்புனா மரணம்தான்.அந்த நேரத்துல ஆசைப் பட்டது எல்லாம் வாங்கி குடுக்கனும்னு சொல்லுவாங்க.எங்க மதினி ஆசைப்பட்டு கேட்டுச்சு.அதுனாலதான். ''கரோனா ஊரடங்கு'' கடைகளும் இல்ல. நாங்க இந்த சுமதி வீட்டு மாமரத்துக்குதான் போனோம்.இப்பதான் பூ பூத்திருக்கு. அதுனாலதான் இங்க வந்தோம்.எல்லோரும் சேந்து பறிச்சதால இவ்வளவு மாங்காய் ஆகிடுச்சு. எங்களுக்கு மாங்காயே வேண்டாம். எங்க வீட்டுக்கு மட்டும் தெறிஞ்சா கொன்னே போடுவாங்க .இனிமே இந்தத் திசைப் பக்கமே வர மாட்டோம் .

இது நம் மகளிர்படை வீரப் பெண்மணிகளின்''மஞ்சுவின் மசக்கை கவுரத்துக்காக''.. தற்காலிக பின் வாங்குதல்தான்.மற்றபடி நேர்மையிலும்,ஒழுக்கத்திலும் மற்றும் போர் என்று வந்து விட்டால் வீரத்திலும் நம் மகளிர்கள் யாரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. தோட்டத்துக்கார பெரியவருக்கு ''தலைப் பிரசவம் மற்றும் அவரின் நல்ல குணங்களைப் பற்றி மகளிர்படை பேசியதில் மனது ஒரு மாதிரியாக நெகிழ்ந்து'' போய் விட்டார்.அடப் பரவாயில்லைம்மா இதுக்காகவெல்லாம் வருத்தப் படாதீங்க.நான் ஊருல யாருகிட்டயும் சொல்ல மாட்டேன். மாங்காய் எல்லாம் நீங்களே எடுத்துக்கங்கம்மா.இனிமே மாங்காய் வேணுமின்னா பின்னாடிதான் என் வீடு. என்கிட்டே கேட்டுட்டே பறிச்சுக்கலாம்.நீங்கல்லாம் என் பொண்ணுக மாதிரி.உங்க மதினிக்கு குழந்தை பிறந்த உடனே மறக்காமவந்து சொல்லுங்க. ''மாம்பழக்கூடையோட'' ,வந்து பாக்குறேன்.போகும்போது மரத்தடியில கிடக்குற உங்க மாஸ்க் எல்லாத்தையும் மறக்காம முகத்துல மாட்டிட்டு போங்க''.சிரித்துக் கொண்டே சொன்னார் பெரியவர்.TAKE CARE CORONA.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT