ADVERTISEMENT

சூரிய நமஸ்கார பலன் முழுமையாய் கிடைக்க... - சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம்

12:16 PM Mar 21, 2024 | dassA

ஒவ்வொரு உடல் அமைப்பும் வேறுபடும் என்பதால் அதற்கு தகுந்தாற் போல உடற்பயிற்சி மற்றும் உணவு முறையை பின்பற்ற வேண்டும் என்றும் அதைப் போலவே பித்த உடம்பு என்பார்கள் அதுபோன்ற உடலமைப்பு கொண்டவர்கள் எப்போதெல்லாம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.

ADVERTISEMENT

நம் உடல் பித்தம், வாதம், கபம் என்று வகைப்படுத்தலாம். ஒவ்வொரு தேக அமைப்பினரும் அவருக்கேற்றார் போல உடற்பயிற்சி செய்ய வேண்டும். வாதம் என்பது காற்றை குறிப்பது. உதாரணத்திற்கு வாத உடல் அமைப்பினர் இயல்பாகவே வேகமான குணாதிசயத்தை கொண்டவர்கள். அவர்கள் இரவு நேரம் நன்றாக வேகத்துடன் ஒன்றரை மணிநேரம் மேலாக நடைப்பயிற்சி செய்தாலும் கூட , சரியான தூக்கமின்றி உடல் பலனை கொடுக்காது. அவர்களுக்கு இரண்டு எலும்புகளுக்கு நடுவே தசையை இழுவை கொடுக்கும் பயிற்சி போன்றவை ஒத்து வரும். அவர்கள் யோகா பயிற்சியை பகல் நேரத்தில் செய்யலாம். உடற்பயிற்சி முடித்து நல்ல மூச்சு பயிற்சி, முத்திரை என்று செய்து மனதை அமைதிப்படுத்தி முடிக்க வேண்டும். இவர்களுக்கு சூரிய நமஸ்காரம் நல்ல பலன் கிடைக்கும்.

ADVERTISEMENT

அதே நேரம் பித்த தேக அமைப்பினர் பகல் நேரம் பயிற்சியை தவிர்த்து இரவு நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். வாத தேகம் இருப்பவர்கள் சீக்கிரமாக பழக்கத்தை கடைபிடிக்காமல் விட்டுவிடும் மனோபாவம் இருப்பதால், தனியாக செய்யாமல் குழுவுடன் பயிற்சிகளை செய்ய வேண்டும். அதுவும் அதிகாலை ஒரே நேரத்தில் செய்வதை கடைபிடிக்க வேண்டும். மேலும் வாத தேகம் கொண்டவர் பசியில்லாத போது சாப்பிடக் கூடாது. சாப்பிடவுடன் வெந்நீர் குடிக்கலாம். வறுத்த, வறண்ட, பொறித்த உணவுகளை உட்கொள்ளக் கூடாது. அவர்கள் வேலை பார்க்கும் இடம் பரபரப்பான சூழல் அல்லாது மிதமான சூழலாக இருக்க வேண்டும். இவர்களுக்கு கண்களில் வறட்சி பிரச்சனை வரும் என்பதால் வாரம் ஒருமுறை கண்டிப்பாக எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் கட்டாயம் மாதம் ஒருமுறை பேதி மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல அவர்களது சிந்தனை ஓட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மனதை அமைதிப்படுத்தி தினசரி இரவில் தியானம் செய்ய வேண்டும். வீடு, உறவுகள், தங்குமிடம், வேலை பார்க்கும் இடம் என மாற்றிக்கொண்டே இருக்கும் பழக்கத்தை கொண்டுள்ளவர்கள் வாத அமைப்பினர். எனவே பொதுவாக இதுபோன்ற பழக்கங்களை தொடர்ந்து, குறைந்தது ஆறு மாத காலம் கடைப்பிடித்தார்கள் எனில் கண்டிப்பாக அவர்களது வாழ்வியல் சிறப்பாக அமையும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT