ADVERTISEMENT

பெண்களுக்கு ஒரு வரப்பிரசாத மூலிகை இது - விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் 

11:29 AM Sep 14, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெண்களுக்கு மருத்துவர் ரீதியில் மிகவும் உதவும் இம்பூறல் மூலிகையின் நன்மைகள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்குகிறார்

இம்பூறல் மூலிகை மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. சித்தர்கள் இதைப் பெரிய அளவில் பயன்படுத்தினார்கள். ரத்த சம்பந்தமான நிறைய வியாதிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாக இருக்கக்கூடியது இந்த மூலிகை. இது லேகியமாகவும், கடைகளில் மாத்திரையாகவும் கிடைக்கிறது. நிறைய கம்பெனிகள் இதன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. TB நோய் உள்ளவர்களுக்கு இந்த மூலிகை ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். தொடர்ந்து இருமிக்கொண்டே இருப்பதால் அவர்களுடைய எனர்ஜி குறையும். அவர்களுடைய எனர்ஜி லெவலை இந்த மூலிகை அதிகரிக்கச் செய்கிறது.

இதை உணவுக்கு முன்பும் எடுத்துக்கொள்ளலாம், உணவுக்கு பின்பும் எடுத்துக்கொள்ளலாம். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைக்கு இந்த மூலிகை சிறந்த தீர்வாக அமையும். ரத்தக் கசிவிலிருந்து தடுக்கும் மருந்தாக இது இருக்கும். இந்த மூலிகையை இப்போது நாம் பயன்படுத்துவது மிகவும் குறைந்துவிட்டது. இந்த மூலிகையுடன் வல்லாரைக் கீரையையும் சேர்த்து அரைத்து, உருண்டையாக செய்து, மோருடன் சேர்த்து கொடுத்தால் ரத்தக்கசிவு குறையும். பைல்ஸ் நோயாளிகளுக்கும் இந்த மூலிகை ஒரு சிறந்த தீர்வாக அமையும்.

கபம் சம்பந்தமான நோய்களுக்கு எதிரான பேராற்றல் தரக்கூடிய மருந்தாக இது அமையும். பார்ப்பதற்கு சிறிய மூலிகையாக இருக்கும் இம்பூறல், ரத்தத்தையே சுத்தம் செய்யும் சக்தி படைத்தது. இப்போது பலருக்கும் புற்றுநோய் வருகிறது. அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கும் இந்த மூலிகை பயன்படுகிறது. நோய் வராமல் தடுக்கும் இந்த மூலிகையை நாம் உண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT