ADVERTISEMENT

உத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்

01:24 PM Mar 23, 2019 | Anonymous (not verified)

"உத்தியோகம் புருஷ லட்சணம்' என்பார்கள். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் பெண்களுக்கும் இது பொருந்தும். ஏதாவது ஒரு துறையில் பணிபுரிந்து சம்பாதிப்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. முன்பெல்லாம் "கழுதை மேய்த்தாலும் அரசுத் துறையில் மேய்ப்பவனுக்குதான் பெண்ணைக் கொடுப்பேன்' என்று பெற்றோர்கள் அடம்பிடிப்பார்கள்.

ADVERTISEMENT

ஆனால், தற்போது சம்பாதிப்பதற்கு ஏதுவாக தனியார் துறைகளிலும் நிறைய வாய்ப்புகள் இருப்பதால், அரசு வேலையை எல்லாரும் எதிர்பார்ப்பதில்லை. நிறைய சம்பாதிக்கவேண்டும். உயர்வான பதவிகளை வகிக்கவேண்டும். சமுதாயத்தில் நல்லதொரு வாய்ப்பினைப் பெறவேண்டும் என்பதே பலரது குறிக்கோளாக இருக்கும்.

ADVERTISEMENT



இப்படி உத்தியோகரீதியாக சம்பாதிக்கும் யோகம் யாருக்கு உண்டாகும் என்று ஜோதிடரீதியாக ஆராயும்போது, ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 10-ஆம் வீடானது தொழில், உத்தியோகத்தைக் குறிப்பிடுவதாக உள்ளது. 10-ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும், 10-ல் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் அதிபலம் பெற்றிருந்தாலும்- தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 10-ல் ஒரு கிரகம் அமையப்பெற்றிருந்தாலும், 10-ஆம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்று 10-ல் கிரகங்கள் இல்லாமல் இருந்தாலும் உத்தியோகம் செய்து சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

ஒருவருக்கு நல்ல உத்தியோகம் அமையவேண்டுமென்றால் நவகிரகங்கள் பலமாக இருத்தல் அவசியம். நவகிரகங்களில் உத்தியோக காரகன் செவ்வாயாவார். செவ்வாய் பலம்பெற்றிருந்தால் நல்ல நிர்வாகத் திறமை, எந்தவொரு காரியத்திலும் திறம்பட செயல்பட்டு தீர்க்கமான முடிவெடுக்கும் ஆற்றல் இருக்கும். செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும், உபஜய ஸ்தானம் எனப்படும் 3, 6, 10, 11-ல் அமையப்பெற்று நட்புகிரகச் சேர்க்கை பெற்றிருந்தாலும், உயர்ந்த உத்தியோகத்தில் பணிபுரியக்கூடிய உன்னத நிலை ஏற்படும்.

நிர்வாக காரகனான செவ்வாய் 10-ல் அமைந்தால் திக்பலம் பெறுவார். அப்படி அமைந்துவிட்டால் அந்த ஜாதகர் சிறந்த நிர்வாகத் திறமையுடனிருப்பது மட்டுமின்றி, தன்னுடைய திறமையால் செய்யும் பணியில் படிப்படியாக உயர்ந்து சமுதயாத்தில் ஓர் உன்னதமான உயர்வினைப் பெறுவார். சுபகிரகமான குருவின் பார்வையானது செவ்வாய்க்கோ, 10-ஆம் வீட்டிற்கோ இருக்குமேயானால் நல்ல உத்தியோகம், கௌரவமான பதவிகள் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

நவகிரகங்களில் அரசனாக விளங்கக்கூடிய சூரியன் 10-ஆம் அதிபதியாக இருந்தாலோ, 10-ஆம் வீட்டில் அமைந்து குருபார்வை பெற்றாலோ, அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரிந்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு அமையும். ஒருவரின் ஜாதகத்தில் 10-ல் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு போன்ற கிரகங்களின் ஆதிக்கம் இருக்குமேயானால், பெரும்பாலும் உத்தியோகம் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பே உண்டாகும். 10-ஆம் அதிபதியுடன் 3, 6, 8, 12-க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும், 10-ஆம் அதிபதியே 3, 6, 8, 12-ல் மறைந்திருந்தாலும், பாதக ஸ்தானத்தில் இருந்தாலும், பாதகாதிபதியின் சேர்க்கை மற்றும் பாதகாதிபதியின் நட்சத்திரத்தில் அமைந்திருந்தாலும் சொந்தத் தொழில் செய்வதைவிட பிறரைச் சார்ந்து உத்தியோகம் செய்து சம்பாதிப்பது சிறப்பு.

ஒருவருக்கு என்னதான் தொழில் செய்து சம்பாதிக்கக்கூடிய யோக அமைப்பு கொண்ட ஜாதகமாக இருந்தாலும், சம்பாதிக்கக்கூடிய வயதில் வரக்கூடிய தசையானது சாதகமானதாக இருந்தால் மட்டுமே தொழில் செய்து சம்பாதிக்க வாய்ப்பு உண்டாகும். அதுவே, அந்த வயதில் நடைபெறக்கூடிய தசையானது மறைவு ஸ்தானங்களான 3, 6, 8, 12-க்கு உரிய கிரகங்களின் தசையாகவோ, ஜென்ம லக்னத்திற்கு பாதகாதிபதியின் தசையாகவோ, பாதகாதிபதியின் நடசத்திரத்தில் அமையப்பெற்ற கிரகத்தின் தசையாகவோ, பாதக ஸ்தானத்தில் அமையப்பெற்ற கிரகங்களின் தசையாகவோ இருக்குமேயானால், முதலீடு செய்து தொழில் செய்வதைவிட பிறரைச் சார்ந்து உத்தியோகம் செய்வதே நற்பலனைத் தரும். பொதுவாக, ஒருவருக்கு நடக்கக்கூடிய தசையானது சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, கேது போன்ற கிரகங்களின் தசையாக இருந்தால் பெரும்பாலும் உத்தியோகம் செய்யக்கூடிய வாய்ப்பே அமைகிறது.

அதுபோல ஒருவருக்கு நடக்கக்கூடிய தசையானது 3-ஆவது தசையாக இருந்தாலும் உத்தியோக அமைப்பு உண்டாகிறது. உதாரணமாக, செவ்வாயின் நட்சத்திரங்களாகிய மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 3-ஆவது தசையாக குரு தசை வரும். குருவின் நட்சத்திரங்களாகிய புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 3-ஆவது தசையாக புதன்தசை வரும். இதுபோல 3-ஆவது தசை வரும் காலங்களில் பெரும்பாலும் உத்தியோகம் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பே உண்டாகும். சனி பார்வையானது 10-ஆம் வீட்டிற்கு இருக்குமேயானால், அவர் எவ்வளவுதான் திறமை வாய்ந்தவராக இருந்தாலும், கடினமாக உழைத்தாலும், தகுதிக்குக் குறைவான உத்தியோக அமைப்பே உண்டாகும். அவ்வளவாக முன்னேற்றத்தை அடையமுடியாது.

ஒரு ராசியில் அதிககாலம் தங்கக்கூடிய சனி பகவான் கோட்சாரரீதியாக ஜென்ம ராசிக்கு 3, 6, 11-ல் சஞ்சரிக்கும் காலங்களிலும், ஆண்டுக்கோளான குரு பகவான் 2, 5, 7, 9, 11-ல் சஞ்சரிக்கும் காலங்களிலும் உத்தியோகரீதியாக உயர்வுகள், மகிழ்ச்சி தரக்கூடிய இனிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதாரத்தில் மேன்மைகள், திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறும்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT