ADVERTISEMENT

பெண்ணின் உயிரை பறித்த கேக்... சோகத்தில் முடிந்த கொண்டாட்ட நிகழ்ச்சி...

12:04 PM Jan 28, 2020 | kirubahar@nakk…

ஜனவரி 26 ஆம் தேதி ஆஸ்திரேலியா முழுவதும் 'ஆஸ்திரேலிய தினம்' கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குயின்ஸ்லாந்து பகுதியில் இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கொண்டாட்டத்தில், சாப்பாட்டு போட்டியில் கேக் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

குயின்ஸ்லாந்தில் உள்ள ஹர்வேபே என்ற ஹோட்டலில் கேக் சாப்பிடும் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா நாட்டின் புகழ்பெற்ற கேக் வகையான லேமிங்டனை யார் அதிகமாக சாப்பிடுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர். லேமிங்டன் கேக் என்பது வெண்ணெய், சாக்லெட் மற்றும் தேங்காய் துருவல்களால் செய்யப்பட்டதாகும். இதனை யார் அதிகமா சாப்பிடுகிறார்கள் என்ற அந்த போட்டியில், 60 வயதான பெண் ஒருவர் கலந்துகொண்டு, அதிக அளவிலான கேக்குகளை சாப்பிட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரது தொண்டையில் கேக் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கியுள்ளார். பிறகு அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆஸ்திரேலிய தின கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட அந்த பெண்ணின் உயிரிழப்பு அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT