இந்தியாவின் 74- ஆவது சுதந்திர தினம் நாளைக் கொண்டாடபட உள்ள நிலையில், ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்திய மக்களுக்கு தன்னுடைய சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான வாழ்த்துக் குறிப்பில், "நம்நாடுகளுக்கு இடையேயான உறவு என்பது வர்த்தகம் மற்றும் அரசியல் நகர்வுகளுக்கு அப்பாற்பட்டது. இது வலுவான நம்பிக்கையினால் உருவானது. எங்கள் நாட்டின் மிகப்பெரிய பலமாக இங்கு வாழும் இந்திய மக்கள் உள்ளனர். அவர்கள்தான் எங்கள் நாட்டை பல கலாச்சாரங்கள் நிறைந்த நாடாக மாற்றியுள்ளனர். இரு நாடுகளுக்கு இடையேயான இந்த நட்பு நமக்கும், உலக சமூகத்திற்கும் பயனளிக்கும். இதன் மூலம் இந்திய மக்களுக்கு என்னுடைய சுதந்திர தின நல்வாழ்த்தினைத் தெரிவிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.