ADVERTISEMENT

'ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும்' -ஜோ பைடன் வேண்டுகோள்

12:56 PM Nov 04, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மற்றொரு புறம் தேர்தல் முடிவுகளும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அமெரிக்காவில் நியூயார்க், வெர்மான்ட், மாசசூசட்ஸ், நியூஜெர்சி, கனக்டிகட், டெலவர், மேரிலேண்ட், கோலரோடா, இல்லினாய்ஸ், நியூமெக்ஸிகோ, கலிபோர்னியா, வாஷிங்டன் உள்ளிட்ட மாநிலங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோல் இண்டியானா, டென்னஸி, தெற்கு கரோலினா, புளோரிடா, டெக்சாஸ் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களை ட்ரம்ப் கைப்பற்றியுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 வாக்குகளில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் 238 வாக்குகளும், குடியரசு கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 213 வாக்குகளும் பெற்றுள்ளன. பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகள் 270 ஆகும்.

இதனிடையே நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜோ பைடன், "அமெரிக்க அதிபர் தேர்தலில் நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. முழு முடிவுகள் வரும் வரை தமது கட்சி ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டுகோள்" விடுத்துள்ளார்.

இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் ஜோ பைடன் கட்சியினர் சதி செய்ய முயற்சிக்கின்றனர். வாக்குப்பதிவு முடிந்துவிட்டதால் இனி ஓட்டு போட்டு எதிர்க்கட்சியினரால் வெற்றி பெற முடியாது. மிகப்பெரிய வெற்றி வரப்போவதாகவும் இன்றிரவு அறிக்கை வெளியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் ட்விட்டர் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள ட்விட்டர் நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை தவறாக வழிநடத்தும் வகையில் ட்ரம்பின் கருத்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் முழுவதும் இன்றிரவுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT