ADVERTISEMENT

கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்களுக்கு நற்செய்தி சொன்ன பிரிட்டன்!

05:39 PM Nov 09, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவல் தற்போது உலகத்தையே ஆட்டிப்படைத்துவருகிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகள், வேறு நாடுகளிலிருந்து தங்கள் நாட்டுக்கு வருபவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இங்கிலாந்து அரசும் அவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது.

இந்தநிலையில் அண்மையில் பிரிட்டன் அரசு, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும், ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் தங்கள் நாட்டிற்கு வரும்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாகவே கருதப்பட்டு 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவித்தது.

இதனையடுத்து பிரிட்டனுக்குப் பதிலடி தரும் வகையில், அந்த நாட்டிலிருந்து வரும் பிரிட்டன் குடிமக்கள் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என இந்தியா அறிவித்தது. இதனைத்தொடர்ந்து தான் முன்பு அறிவித்த விதிமுறைகளில் இருந்து பின்வாங்கிய பிரிட்டன் கோவிஷீல்ட் அல்லது பிரிட்டனால் அங்கீகரிக்கப்பட்ட மற்ற தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட இந்தியர்கள் பிரிட்டனில் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என அறிவித்தது.

ஆனால் கோவாக்சின் தடுப்பூசியை பிரிட்டன் அங்கீகரித்ததால், அத்தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள் பிரிட்டனுக்கு சென்றால் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலை நீடித்து வந்தது.

இந்தநிலையில் கோவாக்சின் தடுப்பூசியை தங்களது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் வரும் 22 ஆம் தேதி முதல் சேர்க்கப்போவதாகப் பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இதனால் 22 ஆம் தேதி முதல் கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் பிரிட்டனுக்கு சென்றால் தனிமைப் படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT