Skip to main content

18 வயதுக்கும் குறைவானவர்களுக்கு விரைவில் தடுப்பூசி? - முக்கிய சோதனைக்கு அனுமதியை வழங்கிய நிபுணர் குழு!

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

covaxin

 

உலகெமெங்கும் அச்சுறுத்திவரும் கரோனவைக் கட்டுப்படுத்த, இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கே செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

சமீபத்தில் கனடா, 12 வயதுக்கு மேற்பட்டோருக்கும் பைசர் கரோனா தடுப்பூசியை செலுத்த அனுமதியளித்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே, கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரித்துவரும் இந்திய நிறுவனமான பாரத் பயோ-டெக் நிறுவனம், 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டோர் மீது, கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாவது, மூன்றாவது கட்ட ஆய்வக பரிசோதனைகளை நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. இந்தநிலையில், 2-18 வயதுடையோர் மீதான ஆய்வுக்கு மத்திய அரசின் நிபுணர் குழு அனுமதியளித்துள்ளதாக நிபுணர் குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து, 18 வயதுக்கும் கீழுள்ளவர்களுக்கு விரைவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

Permission granted to covaxin vaccine to 6 to 12 year olds

 

6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.  

 

6 முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என இந்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், 6 முதல் 12 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது.  தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் 6 முதல் 12 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

 

 

Next Story

கரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Corona vaccine price reduction!

 

நாடு முழுவதும் நாளை (10/04/2022) முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

 

தனியார் மருத்துவமனைகளும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளனர். அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுக்கு ரூபாய் 600 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூபாய் 225 ஆக சீரம் இன்ஸ்டிடூட் ஆஃப் இந்தியா குறைத்துள்ளது. இதேபோல், கோவாக்சின் மருந்தின் விலையையும் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்து நிர்ணயித்துள்ளது. 

 

இதனுடன் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக, ரூபாய் 150 வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.