ADVERTISEMENT

'Error' காட்டும்  டிவிட்டர் ; “என்னதான் செய்ற எலான் மஸ்க்” - குமுறும் பயனர்கள்

07:59 AM Dec 29, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான டிவிட்டரைத் தன்வசப்படுத்திக்கொண்டார். டிவிட்டரை வாங்கியதும் அதில் ஏராளமான மாற்றத்தைச் செய்தார். ஏராளமான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கினார். இதன் பின் டிவிட்டர் புளூ டிக் விவகாரம், போலிக் கணக்குகள் போன்ற விவகாரங்கள் பெரிதும் பேசுபொருளாயின. இதனிடையே பிரபல செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்களின் கணக்குகளை முடக்கினார்.

இப்படி டிவிட்டர் நிறுவனத்தினை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து தற்பொழுது வரை சர்ச்சை என்பதே தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், கம்ப்யூட்டரில் ட்விட்டர் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர். கம்ப்யூட்டரில் ட்விட்டரை லாகின் செய்யும்போது பயனர்களுக்கு 'Error' என்றே வருகின்றதால் உலக அளவில் பயனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT