Skip to main content

அரசியல், சினிமா, விளையாட்டு யாரும் விதிவிலக்கல்ல; பாரபட்சமின்றி எலான் மஸ்க் நடவடிக்கை

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

Politics, cinema, sports are no exception; Elon Musk Action Without Discrimination

 

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். ப்ளூ டிக் என்பது பிரபலங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், உரிய பணத்தைக் கட்டி யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் எனும் முறையைக் கொண்டு வந்தார்.

 

மேலும் மாத சந்தா கட்டாதவர்களின் ப்ளூ டிக் பறிக்கப்படும் என்றும் ட்விட்டர் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் சில சினிமா பிரபலங்களுக்கு ப்ளூ டிக் பறிக்கப்பட்டது. இதன்படி, விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்டோரின் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டது. ஷங்கர், லோகேஷ் கனகராஜ், அட்லீ, செல்வராகவன் போன்றோரின் கணக்கில் இருந்தும் ப்ளூ டிக் நீக்கப்பட்டது.

 

அரசியல் தலைவர்களான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், ராகுல் காந்தி போன்றோரின் தனிப்பட்ட கணக்குகளின் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. விளையாட்டு பிரபலங்கள் சச்சின், தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றோரின் ப்ளூ டிக் கணக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இனி மாத சந்தாவாக ரூ.900 கட்டினால் மட்டுமே பிரபலங்களின் கணக்கு அதிகாரப்பூர்வமானது என்பதற்கான ப்ளூ டிக் வழங்கப்படும்.

 

 

சார்ந்த செய்திகள்