Public Apology to Twitter Users - Elon Musk Announces

Advertisment

தடை செய்யப்பட்ட அல்லது முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி மீண்டும் அவர்கள் கணக்கு பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அனைத்து சமூக வலைதளங்களுக்கும் கட்டுப்பாடுகள் உண்டு. பதிவுகளில் தவறாக அல்லது அருவருப்பான பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டால் அவர்களின் கணக்கு முடக்கப்படும். அப்படி ட்விட்டரின் சட்ட திட்டங்களை மீறி பதிவிட்ட பல ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது.

இதில் முடக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரலாமா என வாக்கெடுப்பு நடந்தது. இதில் 32 லட்சம் பேர் வாக்களித்தனர். 72.4% பேர் கொண்டுவரலாம் என்பதற்கு வாக்களித்தனர். இதனை அடுத்து கணக்குகள் முடக்கப்பட்ட பயனாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களின் ட்விட்டர் கணக்குகள் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Advertisment

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போன்ற பிரபலங்களின் கணக்குகளும் வாக்கெடுப்பு நடத்தி மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.