ADVERTISEMENT

டிரம்ப்- க்ரெட்டா இடையே மீண்டும் ட்விட்டர் வார்த்தைப்போர்...

05:33 PM Dec 13, 2019 | kirubahar@nakk…

உலகநாடுகள் பங்குபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் 74வது பொதுக்கூட்டத்தில் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களை கடுமையாக விமர்சித்து இணைய உலகில் பிரபலமானவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமியான க்ரெட்டா தன்பெர்க்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி ஸ்வீடன் நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தி உலக மக்களின் கவனத்தை இவர் பெற்றார். அதன்பின்னர் ஐ.நா வில் இவரின் உரையும் உலக அளவில் பெரும் ஆதரவை பெற்றது. ஆனால் அதன்பின் க்ரெட்டாவை கிண்டல் செய்யும் விதமாக, கிரேட்டா தன்பெர்க் பேசிய வீடியோவை டிரம்ப் தனது ட்விட்டரில் பகிர்ந்து, “இந்த சிறுமி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. இவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது” என விமர்சித்து பதிவிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கிரேட்டா தன்பெர்க், தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள சுயவிவரத்தை மாற்றினார். அதில் அவர் “நான் மகிழ்ச்சியான இளம்பெண். நல்ல எதிர்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்” என குறிப்பிட்டிருந்தார். டிரம்ப் மற்றும் கிரேட்டா இடையேயான இந்த ட்விட்டர் சண்டை பலரையும் வியப்படைய வைத்தது.

இந்நிலையில், டைம்ஸ் இதழின் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் என்ற பட்டத்தை க்ரெட்டா தன்பெர்க் பெற்றுள்ளார். இதனை விமர்சிக்கும் வகையில், ''இது அபத்தமானது. கிரெட்டா தனது கோபத்தைக் கையாள்வது தொடர்பாக செயலாற்ற வேண்டும். பின்னர் அவர் தனது நண்பருடன் இணைந்து பழைய படம் ஒன்றைப் பார்க்க வேண்டும்'' என்று ட்ரம்ப் பதிவிட்டிருந்தார். மீண்டும் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள சுய விவரத்தில், “இளம்பருவப் பெண் தனது கோபத்தைக் கையாள்வது குறித்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாள். தற்போது தனது நண்பருடன் பழைய படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்” என்று பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT