greta gives advice to trump about anger management

கோபத்தை குறைத்துக்கொள்ளுமாறு தனக்கு ட்ரம்ப் கூறிய அதே அறிவுரையை தற்போது அவருக்கே திரும்ப கொடுத்துள்ளார் க்ரெட்டா தன்பெர்க்.

Advertisment

உலகநாடுகள் பங்குபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் 74வது பொதுக்கூட்டத்தில் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களை கடுமையாக விமர்சித்து இணைய உலகில் பிரபலமானவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமியான க்ரெட்டா தன்பெர்க். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி ஸ்வீடன் நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தி உலக மக்களின் கவனத்தை இவர் பெற்றார். அதன்பின்னர் ஐ.நா.வில் இவரின் உரையும் உலக அளவில் பெரும் ஆதரவைப் பெற்றது. ஆனால் அதன்பின் க்ரெட்டா மற்றும் ட்ரம்ப் இடையே அவ்வப்போது வார்தைமோதல் நடந்து வந்தது.

Advertisment

இந்நிலையில் டைம்ஸ் இதழின் 2019ம் ஆண்டுக்கான சிறந்த நபராக கிரேட்டா தன்பெர்க் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்ரம்ப், "மிகவும் அபத்தமானது. க்ரெட்டா தனது கோப மேலாண்மை பிரச்சனைக்குத் தீர்வு கண்டறிய வேண்டும். இல்லையென்றால் நண்பருடன் ஒரு நல்ல பழைய திரைப்படத்திற்கு செல்லுங்கள்! சில் க்ரெட்டா, சில்!" எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது அமெரிக்க வாக்கு எண்ணிக்கை குறித்து பதிவிட்ட ட்ரம்ப்பின் கருத்துக்குப் பதில் தெரிவித்துள்ள க்ரெட்டா, "மிகவும் அபத்தமானது. ட்ரம்ப் தனது கோப மேலாண்மை பிரச்சனைக்குத் தீர்வு கண்டறிய வேண்டும். இல்லையென்றால் நண்பருடன் ஒரு நல்ல பழைய திரைப்படத்திற்கு செல்லுங்கள்! சில் டொனால்ட், சில்!" எனத் தெரிவித்துள்ளார்.