zz

அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பது குறித்து க்ரெட்டா தன்பெர்க் பேசியுள்ளார்.

Advertisment

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஒருபுறம் கரோனாவால் அந்நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தொழில்துறை முழுவதும் முடங்கியுள்ள நிலையில், குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரான ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் ஆகியோர் நாடு முழுவதும் முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பது குறித்து க்ரெட்டா தன்பெர்க் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், நான் ஒருபோதும் கட்சி அரசியலில் ஈடுபட மாட்டேன், ஆனால் வரவிருக்கும் அமெரிக்கத் தேர்தல் எல்லாவற்றிற்கும் மேலானது என்றும், தனது ஆதரவை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடெனுக்கு வெளிப்படையாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.