ADVERTISEMENT

உலகிலேயே இந்திய மெட்ரோ சிட்டிகளில்தான் செலவு குறைவு...!

01:20 PM Mar 20, 2019 | tarivazhagan

பொருளாதார நுண்ணறிவு பிரிவு சமீபத்தில், உலக முழுவதில் வாழுவதற்கு அதிக செலவு ஆகக்கூடிய நகரங்கள் மற்றும் குறைவான செலவு ஆகக்கூடிய நகரங்கள் எவை என்பதை குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில் சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய நகரங்கள் வாழ்வதற்கு குறைவான செலவு ஆகக்கூடிய நகரங்கள் என தெரியவந்துள்ளது. அதேசமயம் சிங்கப்பூர், ஹாங் காங் மற்றும் பாரிஸ் ஆகிய நகரங்கள் அதிக செலவு ஆகக்கூடிய நகரங்கள் என தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT


133 நகரங்கள் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உணவின் விலை, ஆடை, வாடகை, பொது போக்குவரத்து மற்றும் தனியார் பள்ளிகள் ஆகியவற்றை இந்த ஆய்வில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் குறைவான செலவு ஆகக்கூடிய நகரங்களில் இந்தியாவை சேர்ந்த சென்னை, பெங்களுர் மற்றும் டெல்லி ஆகிய மூன்று நகரங்கள் இருக்கிறது.

ADVERTISEMENT


அமெரிக்காவின் நியூ யார்க் வாழ்வதற்கு அதிக செலவு ஆகக்கூடிய பட்டியலில் ஏழாவது இடத்திலும், அமெரிக்காவின் மற்றொரு நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் பத்தாவது இடத்திலும் உள்ளது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT